தோசா பிளாசா நிறுவனர் பிரேம் கணபதியின் வெற்றிக் கதை!

By saravanan

பிரேம் கணபதி தோசா பிளாசா என்ற உணவகத்தின் நிறுவனர். ரூபாய் 1000 முதலீட்டில் தொடங்கி தற்போது 30 கோடி வருவாயை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது. மும்பை மட்டும் அல்லாது இந்தியாவின் பிற பகுதிகள், நியூசிலாந்து, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் 72 விற்பனை நிலையங்களையும் இந்தியாவில் 160 விற்பனை நிலையங்களையும் கொண்ட ஒரு உணவகமாக மாறியுள்ளது. வாருங்கள் ரூபாய் 1000 முதலீட்டில் தமிழகத்தில் இருந்து சென்று மும்பையில் சிறந்த தொழில்முனைவோராக மாறிய பிரேம் கணபதி பற்றியும் அவர் உருவாக்கிய தோசா பிளாசா பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கணபதி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தவர். ஏழு உடன்பிறப்புகளில் மூத்தவராக பிறந்தவர் குடும்ப வறுமை காரணமாக தனது பத்தாம் வகுப்புக்கு பிறகு வேலை தேடி சென்னை சென்றார். சென்னையில் பல வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.

ஒரு நாள், மும்பையில் மாதம் ரூ.1,200 சம்பளம் தருவதாகச் சொல்லி ஒருவர் கணபதியை மும்பைக்கு அழைத்தார். 17 வயது சிறுவனான கணபதி பெற்றோருக்கு தெரிவிக்காமல் அவருடன் மும்பை புறப்பட்டார்.

1900-ல் ரூபாய் 200 வுடன் மும்பை சென்ற கணபதியை உடன் அழைத்துசென்றவர் ரூபாய் 200 காக ஏமாற்றியதன் விளைவாக மொழிதெரியாத நகரத்தில் அவர் பல சவால்களை எதிர்கொண்டார். கணபதியிடம் பணமும் இல்லை, உள்ளூர் மொழியும் தெரியாது. அவரின் அதிஷ்டம் ஒரு தமிழ் குடும்பம் அவருக்கு வேலை தேட உதவியது. அதன் விளைவாக பேக்கரியில் பாத்திரங்கள் கழுவும் வேலை கிடைத்தது. பகல் நேரங்களில் அங்கு வேலை செய்துவிட்டு இரவு நேரங்களில் அந்த பேக்கரியிலேயே தூங்கவும் அவருக்கு உதவினர்.

இரண்டு ஆண்டுகளில், பாந்த்ரா பகுதியிலுள்ள பல்வேறு உணவகங்களில் வேலை செய்து தனக்கான ஒரு தொழிலுக்கான முதலீட்டை சேமிக்க தொடங்கினார்.

1992-ல் தனது சேமிப்பன ரூபாய் 1000 த்தை கொண்டு, 150 ரூபாய்க்கு ஒரு கை வண்டியை வாடகைக்கு எடுத்து, ரூபாய் 1,000 மதிப்புள்ள அடிப்படை தேவைக்கான பொருட்கள் வாங்கி வாஷி ரயில் நிலையம் எதிரே உள்ள தெருவில் இட்லி மற்றும் தோசை விற்கும் கடை ஆரம்பித்தார். பிறகு தனக்கு உதவியாக நபர்களை சேர்த்துக்கொண்டு தனது கடையை நடத்தினர். மற்ற கடைகளில் இருந்து மாறுபட்டு இருந்த சுவையும் உயர்தர உணவகத்தில் பணிபுரிவது போன்ற உடையும் அவர்களை முன்னோக்கி அழைத்து சென்றது. வாடிக்கையாளர்களின் மதிப்பை பெற்றதன் மூலம் மாதம் ரூபாய் 20,000 வரை நிகர லாபத்தை பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த தள்ளுவண்டி கடையில் வியாபாரம் செய்ய உரிமம் பெறாததால், நகராட்சி அதிகாரிகளால் வண்டி பறிமுதல் செய்யப்படுவதும் அபராதம் செலுத்துவதும் வாடிக்கையாக மாறியுள்ளது.

இவற்றில் இருந்து மீள, அவரின் வளர்ச்சியின் அடுத்தபடியாக சாலை ஒரே கடையில் இருந்து தனக்கு என்று ஒரு கடையை 1997-ல் ரூபாய் 50,000-க்கு குத்தகைக்கு மாதம் ரூபாய் 5000 வாடகைக்கு மேலும் 2 நபர்களை சேர்த்துக்கொண்டு பிரேம் சாகர் தோசை பிளாசா என்ற பெயரில் வாஷியில் ஆரம்பித்தார்.

இந்த கடையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை உருவாக்கியது. ஆனால் அவரின் கடைக்கு அருகில் புதிதாக உருவாக்கிய chinese restaurant அவரின் வளர்ச்சியை மூன்று மாதங்களிலேயே முடக்கியது. அப்போது கிடைத்த கல்லுரி மாணவர்களின் உதவியோடு இணையத்தை பயன்படுத்துவது பற்றியும் உணவுகளில் புதுமையை சேர்ப்பது பற்றியும் கற்றுக்கொண்டார். அதன் விளைவாக மெரிக்கன் சாப்சுயே, ஷெஸ்வான் தோசை, பனீர் குளிர், ஸ்பிரிங் ரோல் தோசை போன்ற சீன பாணியிலான தோசைகளின் வகைகளை கற்றுக்கொண்டு அதனை தனது உணவகத்தில் செயல்படுத்த தொடங்கினர். இப்படி முதலில் 26 வகையான புதுமையான தோசைகளை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார்.

2002-ல் 105 வகையான தோசைகளை உருவாக்கி தனக்கு என்ற தனி வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளார். இந்த கடைகள் அவருக்கு நல்ல வருமனத்தை கொடுத்தாலும் McDonald’s மற்றும் Pizza Hut போன்று தனது கடைகளையும் பெரிய மால்களில் நிறுவ வேண்டும் என்பதை குறிக்கோளாக செயல்பட்டார். அவரின் முயற்சி பல முறை தோல்வியை சந்தித்தபோதும் தொடர்முயற்சிகள் செய்துகொண்டே இருந்தார் அனது கடைகளை மால்களில் துவங்க.

அவரின் விட முயற்சியின் பலனாக சென்ட்ரல் மால் அவர்களின் கடைக்கு அருகிலும் மற்றும் அதன் நிர்வாக பிரிவில் இருந்த பெருபாலானவர்கள் தோசா பிளாசாவின் வாடிக்கையாளராகவும் இருந்ததால் அவர்களின் சேவையை சிறப்பானதாக இருந்ததால் அவர்களின் கடையை திறக்க அணுகினார். ஆனால் அந்த கடையை நிர்வகிப்பவர் வேறுஒருவராகவும் அங்கு பயன்படுத்தும் பொருட்கள் தோசா பிளாசா கடையுடையதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டது,

2003 ஆம் ஆண்டு தானேயில் உள்ள வொண்டர் மாலில் முதல் உரிமையாளர் விற்பனை நிலையமாக தோசா பிளாசா திறக்கப்பட்டது.

2003-ல் மாலில் திறக்கப்பட்ட பின்பு டாக்டர் டி என்ற ப்ராண்ட் அவர்களின் உணவுகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு மற்ற இடங்களில் தோசை பிளாசா விற்பனை நிலையங்களை அமைக்க விரும்பும் நபர்கள் துணையுடன் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்பட்டது.

2012-ல் நியூசிலாந்தில் மூன்று அவுட்லெட்டு கடைகளும் துபாயில் இரண்டு அவுட்லெட்டு கடைகளையும் இந்தியாவில் மேலும் 10-15 உணவகங்களையும் திறந்தனர்.  இப்பொழுது பல்வேறு நாடுகளில் 72 கடைகளும் இந்தியாவில் 160-க்கும் அதிகமான கடைகளுடன் இயங்கி வருகிறது. தோசா பிளாசாவின் நிராகர லாபம் 30 கோடி ஆகும்.

0 முதலீட்டில் ஆரம்பித்து பல இன்னல்களை சந்தித்து மொழி தெரியாத இடத்தில் இன்று 200 க்கும் அதிகமான கடைகளுக்கு முதலாளியாக உள்ளார் பிரேம் கணபதி.

.
மேலும்