மகாகவி பாரதியார் பிறந்தநாள் கவிதை

By News Room

வெள்ளைப் பரங்கியரை துரை

என்ற காலமும் போச்சே

என்றுப் பாடினாய் பாரதி

 ஏழை பாழை வித்தியாசம் மாறவில்லையே ?

 

காணி நிலம் வேண்டும் என்றாய் பராசக்தி

நாங்களும் அரசு நிலத்தில்

தனியார் கல்லூரிகளைக் கட்டி தள்ளுகிறோம்

 

காக்கைக் குருவிகள் எங்கள் ஜாதி

நீலும் கடலும், வானும் எங்கள் கூட்டம் என்றாய்

நாங்களோ ஓசோன் படலத்தில்  ஓட்டையிட்டு விட்டோமே

 

 இயற்கை வளங்களை எல்லாம்

 அண்டை மாநிலத்திற்கும்

 அயல் நாட்டுக்கும் கடத்துகிறோமே

 

இனி ஒரு விதி செய்வோம்

அதை எந்த நாளும் காப்போம் என்றாய்

நாங்களோ இன்னொரு வரி போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்

 

 எங்கள் தந்தையின் நாடு என்றப் போதிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

என்று நீ பாடினாய்

நாங்களும் சொந்த மண்ணிலேயே

அநியாக்கப்படுகிறோமே

 

 பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றாய்

நாங்கள் இன்னும் பாரைத் தாண்டியே வெளியே வராமல் இருக்கிறோம்,

 

 நீ செந்தமிழ் தேனீ 

 சிந்துக்குத் தந்தை

 நீடு துயில் நீங்க வந்த நிலா,

 

இரா. மதிராஜ்,

.
மேலும்