ஒருமுறை காந்தி சென்னை வந்திருந்தபோது., பாரதியார் அவரை சந்தித்து, “திருவல்லிக்கேணியிலே, நானும் என் நண்பர்களும் ஒரு கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்., நீங்கள் வந்து பேசுங்கள் “ என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு, காந்தி.., “ அங்கே வர முடியாது., நீங்கள் வேண்டுமானால் அடையாரில் நான் பேச இருக்கின்ற கூட்டத்துக்கு வாருங்கள் “., என்று பதில் சொன்னார்.
தொண்டர்களை மதிக்காத காந்தியின் அலட்சியமான பதிலால், கோபமடைந்த பாரதியார் விருட்டென்று அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
தனது கோபம் தணியாத பாரதியார், காந்திக்கு கடிதம் ஒன்று எழுதுகிறார். அந்தக் கடிதத்தை., Mr.Gandhi., என்று தொடங்கி ஆங்கிலத்தில் எழுதுகிறார்.
அதற்கு கிண்டலாகப் பதில் கடிதம் எழுதுகிறார் காந்தி..,என்னவென்று தெரியுமா..?,
பாரதி..!.,உங்கள் கடிதம் கிடைத்தது., உங்கள் தாய்மொழியிலே எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்களே...[ கிண்டல்].
அதற்கும் பாரதியார் பதில் கடிதம் அனுப்புகிறார்.., இப்படி...
“ நான் திட்டுவதற்கெல்லாம் என் தாய் மொழியைப் பயன் படுத்துவதில்லை “.
** அவர் தான் பாரதியார்.
[ மேற்சொன்ன கடிதங்கள் புதுதில்லி காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளன. ]
## தகவல் : வார்த்தைச் சித்தர் திரு: வலம்புரி ஜான் அவர்கள்.