கவிதைகளுக்கு தூக்கம் கவிஞர்களுக்கு ஏக்கம்.. ஏதேதோ நினைத்து எழுதுகோல் முனை உடைத்தேன்.. உன் முகம் காணாமலே.. உள்ளுக்குள் கவி புதைத்தேன்... பிணங்களாய் கவிதைகள் உள்ளுக்குள் இறக்கும்.. உன் விழி திறந்து உயிர் கொடேன் உன்னிடம் கேட்கும்... பார்வைகள் பட்டால் தான் பரிசுகளும் பெறக்கூடும்.. பரிசுகள் உன் மனதில் மையலும் கொள்ளக்கூடும்.. மனசையும் நீ மறைப்பால் மறைக்காதே.. மடை திறக்கவே ஆசை மனதை உடைக்காதே... மஞ்சள் வெயில் மாலைநேரம் மாலை கருக்கும் மனசினோரம் மங்கை பெருமூச்சு காற்றில் மிதக்காதா.. காற்றோடு சொன்ன என் வேதனைகள் திறக்காதா... வேணும் நீ என்றே நேற்று வரை தோணவில்லை.. வேணும் என்கிறேன் இன்றோ உன்னை காணவில்லை.. மனதிற்குள் கதவிருந்தால் உன்னைப் பூட்டியே வைத்திருப்பேன்.. மறுநொடியே நான் சாவியை தொலைத்திருப்பேன்.. சாதனைகள் எல்லாமே சவத்திற்கு ஏதடி.. நான் சவமாகும் முன்னாலே ஒருமுறை நீ சிரி அது சரித்திரம் தானடி... உன்னைப் பார்த்த பின் தான் உயிர் வருமோ..அதுவரை நான் நடை பிணமோ... .. இயலிசம்...