அர்த்தமுள்ள அந்தரங்கம் விமர்சனம் #அர்த்தமுள்ள_அந்தரங்கம் எழுதியவர்: உளவியல் நிபுணர் டாக்டர்.ஷாலினி..
விகடன் பதிப்பகம் வெளியீடு.
"மீனை சாப்பிடுவதைப் போல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.. மீனில் நல்லதை (சதையை) எடுத்து, தேவையில்லாததை (முள்ளை) விடுப்பதைப் போல
" சொன்னவர்.. வேறு யாருமில்ல நாந்தேன்..
என்னடாயிது தலைப்பே ஒரு #மாதிரியா இருக்கே ஒரு வேள இது "அந்த" மாதிரியான புத்தகமா இருக்குமோனு நினைச்சீங்கனா அந்த நினைப்ப அழிச்சிபுடுங்க..
மனித இனம் பிறக்குறதுக்கு முன்னமே, கண்ணுக்கேத் தெரியாத , ஓரறிவு, ஈரறிவு உயிரனமா இருக்கும் போதே ஜீன்கள் என சொல்ற மரபணுக்கள் பல ஜித்து, தில்லாலங்கடி வேலைகள செஞ்சு தன்னோட தலைமுறை நீட்டிப்ப இதுநாள் வரைக்கும் செஞ்சுகிட்டு வருது..
பேருக்கு எலும்பும், தோலுமா போத்தி அலையுற நாம, ஒரு சுயநல ஜீனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளோம்.. நாம மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற எல்லா சீவராசிகளும்.. மரம்,செடி, பூச்சி,ஊர்வன, உருள்வன, பறப்பன, தாவுவன இப்படி எல்லாத்தையும் மரபணுக்கள் தான் தன் இஸ்டத்துக்கு ஆட்டி வைக்கிது..
சரி..மேட்டருக்கு வரேன்..
என்ன மேட்டருனா, "மேட்டரு" தான் இப்ப தகவலே.. இன விருத்திக்கான காரணங்கள் என்ன? எதற்காக இது யுகம் யுகமா நடந்துகிட்டு வருது? ஒவ்வொரு உயிரினத்தோட இனவிருத்தியும் எப்படி நடக்குது? இதைப் பற்றி அக்கு வேறா.. ஆணி வேறா பிச்சிப்போட்டு விலாவாரியா விவரிச்சிருக்காங்க.. மனுச பக்கிகள தவிர மத்த சீவராசிகளுக்கு கலவி அதாங்க உடல் உறவு வெறும் சடங்குகாக.. அதாவது இன்ன பருவம் வந்தவுடன், உணர்ச்சி வந்தவுடன் தன்னோட சோடியோட சேரணும்.. தன்னோட இனத்த பெருக்குறதுக்கு ஏற்பாடு செஞ்சிபுட்டு போயிடனும்.. அவ்ளோதான் அதோட வேல..
ஆனா.. மனுச பயலுவலுக்கு அப்படி செய்யாம கலவி என்பத ஒரு சுகமாக அனுபவிக்கனும்.. அடிக்கடி ஈடுபடுத்த வைக்கனும்.. அதன் மூலம் சோடி இணைபிரியாம இருக்கணும்னு மரபணு வழிமுறைய செஞ்சு வச்சிருக்கு.. அது என்னென்ன வழிமுறைனு பார்த்தா.. காமம்.. அந்த காமத்தை 12 விதமாக பிரிச்சி வச்சி ஒவ்வொன்னுக்கும் ஒரு அடிப்படை காரணத்தையும் குறிச்சி வச்சிடுச்சு.. முதல்ல பருவம் வந்ததும் #இனக்கவர்சி ங்கிற காமத்துல ஆரம்பிச்சி.. கடைசி இணையோட (குடும்பம்) கூடுற காமம் வரைக்கும் தெள்ளத் தெளிவாக அதே நேரத்தில் முகம் சுழிக்காம படிக்கிற மாதிரி சின்னச்சின்ன கதையா சொல்லிருக்காங்க.. அதி ஆரம்ப காலத்துல பெண் என்ற ஒரு இனம் மூலமாக தான் சீவராசிகளின் பரிணாமங்கள் ஆரம்பிச்சது.. அப்பறம் அதுல இருந்த சிக்கலை தீர்க்க ஜீன்கள் என்ன செஞ்சுதனுனா பெண்ணோட மரபண ரெண்டா பிரெஞ்சு ஆணுங்கிற இன்னொரு மரபணா பிரிஞ்சது.. ரெண்டுக்கும் வேறுபாட உண்டுபண்ண ஜீன் என்ன செஞ்சிதுனா பெண்ணோட தோற்றம் மொழுக்கடீனு இருக்குற மாதிரியும்.. ஆணோட தோற்றத்த அந்த பெண்ண வசீகரிப்பதுக்காக எக்ஸ்ட்ரா பிட்டிங்கா சிலத கொடுக்க ஆரம்பிச்சது.. என்னத்த கொடுத்தது? பறவைகள்ளையும், விலங்குகளையும் பாத்தாலே தெரியுமே.. ஆண் மயிலுக்கு நீண்ட தோகை.. சேவலுக்கு கொண்டை.. ஆண் சிங்கத்திற்கு பிடரி முடி.. ஆண் யானைக்கு நீண்ட தந்தம்.. ஆண் மனிதனுக்கு அதிகமான வலிமை.. இப்படி பெண்ணை வசீகரிக்கவே அனைத்து ஏற்பாடுகளும்..
அப்பறம் கலவிக்கப்பறம் குட்டிப் போடுதா.. விலங்குகளுக்கு அது பிறந்ததும் இன்ன இன்னது செய்யனும்.. இப்படி நடக்கனும் அப்படி போகனும்னு மூளையில எல்லாத்தையும் பதிஞ்சி வச்சு, அதுகள மட்டும் முழு மூளை வளர்ச்சியோட பிறக்க வச்சிடுது.. அதனா தான் விலங்குகளோட குட்டிகள் பொறந்த உடனே எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுது..
ஆனா மனசனுக்கு அப்படி செய்யல.. ஏன்னா.. விலங்குகள் நாலு கால்கள்ல நடக்குறதுனால அது குட்டிப் போடுறதுக்கு ஏத்தா மாதிரி அதோட உடலோட அமைப்பை வச்சது ஜீன்.. இங்க ரெண்டு கால்கள்ல நடக்குறதுனாலயும், குழந்தை பிறக்கற இடம் குறுகலாக இருக்குறதுனாலயும் மனுச குழந்தையை பாதி மூளை வளர்ச்சியோட பிறக்க வச்சி .. வெளிய வந்தப்பறம் மீதி மூளைய வளர செய்யுது.. முழு மூளையும் உள்ளயே வளந்துட்டா மண்ட பெருசா ஆகிடும்.. அப்பறம் அம்மாகிட்ட இருந்து வெளியே வரமுடியாதுங்கிறதுனால இப்படி ஒரு அமைப்ப உருவாக்கி வச்சிது மரபணு..
அதனால தான் ஆணோட நடையைப்போல இல்லாமல் பெண்ணோட நட கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்..
இன்னும் நிறைய விசயங்கள் இருக்கு.. எழுதுனா உங்களுக்கு ரொம்ப போரடிச்சிடும்.. அதனால கடைசியா ஒரு தகவலை சொல்றேன்..
ஆதிகாலத்தில இருந்து மரபணுக்கள் தங்களோட தொடர் வாழ்வுக்காக உயிரினங்கள்ல வெர்சன் அப்கிரேட் செஞ்சிகிட்டே வந்திருக்கு.. தன்னோட இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒரு பெண் பல ஆண்களோடும்.. ஏனென்றால் அக்காலகட்டத்தில் மருத்துவம்லாம் இல்ல.. நிறைய குழந்தைகள் பிறந்தவுடன் நோயினாலோ, விலங்குகளாலோ இறந்து போயிடுங்க.. பத்து பொறந்தா ஒன்னோ ரெண்டோ தான் பிழைக்கும்.. அதோட பிள்ள பெக்குற பெண்கள் கூட இறந்து போயிடுவாங்க .. அதனால ஒரு இனம் குறைஞ்சி பேலன்ஸ் இல்லாம போயிடக்கூடாதேனு ஒரு பெண் பல ஆண் என்ற நிலை..
அப்பறம் அது மாறி ஒரு ஆண் பல பெண்கள் இப்படியும் நிலை..(ராஜாக்கள் கதைகளை படிச்சா தெரியும்.. ஏனென்றால் பிள்ளைகளை உருவாக்கி போரிட.. ஆட்சி பிடிக்க அவங்களுக்குள் சண்டையிட..எக்செக்ட்ரா..எக்செக்ட்ரா)
கடைசியாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை வரை அப்கிரேட் ஆகிட்டே வந்திருக்கு.. அதோட மிக முக்கியமா.. அந்த ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுக்கூட ஒரே ரத்த உறவுக்குள்ள இல்லாம அதாவது தாய் மாமன், அத்தை மகள் என்று நெருங்கிய சொந்தத்தில் இல்லாம வெளியிடமா இருந்தா பிறக்கிற குழந்தை கூடுதல் ஆரோக்கியமா இருக்குமாம்.. இரத்த உறவுகள்ல ஏன் வேண்டாம்னு சொல்றாங்கனா.. நம்ம மரபணு அடுக்குகள்ல 10 வது அடுக்குல ஏதாவது கோளாறு 50% இருந்தால், அதே மரபணு உள்ள சொந்தத்த கல்யாணம் செய்யும்போது அந்த மரபணுவுல 10 அடுக்குல அதே கோளாறு 50% இருக்குமாம்.. அது ரெண்டும் சேரும் போது 100% முழுக்கோளாறா ஆகிடுமாம்.. அதனால தான் நெருங்கிய உறவுகள்ல கல்யாணம் செஞ்சிகிட்டவங்க குழந்தைங்க ஆரோக்கியம் இல்லாமலும், மூளை வளர்ச்சி இல்லாமலும், அடிக்கடி நோய்வாய்பட்டபடியே இருக்குமாம்..
ம்ம்ம்.. அப்பாடா ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்.. இவ்வளவு கருத்துகளும், இதுக்கு மேலையும் இந்த புத்கத்துல இருக்கு.. எல்லாமும் எளிமையான எழுதியிருக்காங்க இந்த புத்தகத்தோட ஆசிரியர்..
புத்தகம் கிடைச்சா விடாதிங்கோ..
விஜயகுமார் வேல்முருகன்