புத்தகம் என்பது வேறொன்றுமில்லை பெண்

By News Room

புத்தகம் என்பது வேறொன்றுமில்லை பெண்

வாசிக்கத் தெரியாதவர்கள்  தயவு செய்து அதை வாங்காதீர்கள் 

எழுதியவனிடமே  இருந்துவிட்டுப் போகட்டும்

புத்தகம் பற்றிய புரிதல்  இல்லாதவர்கள்  அதைப்போட்டு புரட்ட வேண்டாம் 

கோபத்தில் கிழிக்காதீர்கள்  குப்பையில் எறியாதீர்கள்  எழுதியவன் அழுவான் 

வாங்குமுன் யோசியுங்கள் ஆசையாய் வாங்கி அனாதையாய் தூக்கிப்போடாதீர்கள்

காகிதம் தானேயென  கசக்காதீர்கள்

புத்தகம் என்பது வேறொன்றுமில்லை பெண்.

கவி செல்வ ராணி திருச்சி.

.
மேலும்