அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்ல தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை

By News Room

தமிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. அயோத்தி செல்வதற்கான முதல் சிறப்பு ரயில், இன்று மாலை, கோவையிலிருந்து புறப்படவிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து, அயோத்தி ஶ்ரீராமர் கோவில் தரிசனத்துக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான, மன நிறைவான தரிசனம் கிடைக்க, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.
மேலும்