அரசு விளையாட்டு மைதானம்: ஆம் ஆத்மியினர் கோரிக்கை!

By News Room

நாராயணத்தேவன் பட்டியில் இளைஞர்களுக்கு அரசு விளையாட்டு உள்ளரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வ.உ.சி. திடல் அருகே தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தலைமையில் ஆம் ஆத்மியினர் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

 

கூட்டத்தில் ஆம் ஆத்மி கிளை ஒருங்கிணைப்பாளர் முத்தீஸ்வரன், செயலாளர் அகிலன், பொருளாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் முத்துராஜா, விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு ஒதுக்கீடுகளில் மாணவ மாணவிகள் உயர் கல்வி பயிலவும், அரசு வேலைகளைப் பெற்றிடவும்  விளையாட்டு முக்கியத்துவமாக உள்ளது. 

 

மேலும் உடல் நலத்திற்கும் நன்றாகப் படிப்பதற்கும் விளையாட்டு அவசியமாகும். மேலும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு வலிமையையும் பெருமையையும் சேர்ப்பதற்கு விளையாட்டு தேவைப்படுகிறது என்று விளையாட்டின் சிறப்பு பற்றி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி விளக்கினார்.

.
மேலும்