மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஹரப்பன் சிற்பங்களான தாய் தெய்வம், காளைகள் போன்ற விலங்குகள் மற்றும் புகழ்பெற்ற "நடனப் பெண்" உருவம் ஆகியவை ஹரப்பா நாகரிகத்தை நினைவுபடுத்துகின்றன.
இவை பெரும்பாலும் ஹரப்பா மக்களின் மத வழிபாடு, தினசரி வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. டெரகோட்டா, ஸ்டீடைட் மற்றும் வெண்கலம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஹரப்பன் சிற்பங்கள் ஹரப்பா மக்களின் கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்றன.
மேலும் ஹரப்பா மக்களின் மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலை திறன்களை எடுத்துக்காட்டுகின்றன. ஹரப்பா நாகரிகத்தின் கலை சாதனைகள் அடுத்தடுத்த இந்திய நாகரிகங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.