அவன் அவனோட அம்மாயி வீட்டுக்கு லீவுக்கு வந்திருந்தான். அம்மாவால வரமுடியல. வந்து மூஞ்சியக்காமிச்சிட்டுப்போன்னு அம்மாயி போன்ல அழுதுச்சு. ஏன்னா அம்மாயி ரொம்ப ஒடம்புக்கு முடியாமப்போய் ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி உசிறு பொழைச்சி வந்துருக்கு அதுஆஸ்பத்திரில இருந்தப்ப அம்மா அவசர அவசரமா வந்து ஒரு நாள் இருந்து அம்மாயப் பாத்துக்கிச்சு அதுக்கு மேல அம்மாயி கூட அம்மாவால இருக்கமுடியல. சொல்லிட்டு வந்துருச்சுஏன்னா வீட்டு சூழ்நில அப்புடி அது நடந்து ஒருமாசமாயிப்போச்சு.இப்ப அம்மாயி வீடுக்கு வந்து . இப்ப மேமாசம் அம்மாயி அம்மாவுக்குப்போன் பண்ணுச்சு. புள்ளைகளைக்கூட்டிட்டு வந்து கண்ணுல காமிச்சிட்டுப்போ. பேரனுக எல்லாம் கண்ணுக்குள்ளயே நிக்கிரானுக இப்ப லீவுதான வந்துட்டுப்போன்னு கெஞ்சிச்சி. ஆனா அம்மாவுக்கு என்னமோ ஒடம்பு சரியில்ல தீட்டுப்பிரச்சனைனு அம்மா அம்மயிக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்துச்சு
அதுக்கபுறம் தான் அவனைக்கூப்புட்டு சொல்லிச்சி நீயாவது போய் அம்மாயியப் பாத்துட்டுவா. பெரியவனுக்கு இன்னும் பரிட்ச்சை முடியலன்னு சொல்லி காசும் கைல குடுத்து அனுப்பிச்சி. அவனும் வந்து அம்மாயியப்பாத்தான். அவனைப்பாத்ததும் அம்மாயிக்கு ஒரே சந்தோசம். வீட்டுல சொல்லி காசெடுத்துக்குடுத்து கறிவாங்கியாந்து சமைச்சிப்போடச்சொல்லிச்சி. அவனும் நல்லா சாப்புட்டான். அம்மாயிக்கு மொத்தம்ஏழு மகனுக ரெண்டு மகளுக.அதுல ரெண்டாவது மகதான் இவனோட அம்மா. அந்தவாரம் அம்மாயி யோட மூத்த மகளோட மக(பேத்திக்கு) ளுக்கு வளைகாப்பு நடக்க விருந்துச்சு. அதுக்கு வரமுடியலன்றது அம்மாவுக்கு ரொம்ப வருத்தம் . அதுனால அவன்கிட்ட ஒரு யோசனை சொல்லிருந்துச்சு.
அம்மாயியோட ஏழு மகன்களும் அம்மாயிக்கு வருசா வருசம் தீவாளிக்கு சேலை எடுத்துக்குடுப்பாக இல்ல காசு அனுப்பிவிட்டு சேலை எடுக்கச்சொல்வாக. இந்தவருசம் அம்மாயியோட மகனோடமகன்(மகன்பிள்ளை பேரன்) ரெண்டாயிரம் ரூவா குடுத்து சேலை எடுத்துக்கச்சொல்லிருந்தான். அத இவன் கிட்ட சொல்லி சந்தோசப்பட்டுச்சு. என் பேரன் எனக்கு காசு அனுப்பிருக்கான் சேல எச்டுத்துக்கச்சொல்லின்னு சொல்லும் போது அம்மாயிக்கு அத்தன பெருமை மனசுலயும் மொகத்துலயும். அதேமாதிரி மகனுகளும் சேலைகள் எடுத்துக்குடுத்துருந்தாக.
அதுனால அம்மாயிக்கிட்ட நாளைஞ்சு சேலை இன்னும் கட்டாமலே புதுசா இருந்துச்சு. அதைப்பாத்துட்டு அம்மாயியோட கடைசி மருமக கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தா. அவளுக்கும் அது அம்மாயிதான் அது சொந்த மகபிள்ள பேத்திதான். அதுனால மாமியார்ன்றதை விட அம்மாயின்னுதான் கூப்புடுறதும். அப்ப அந்தப்பிள்ள அம்மாயியக் கேலி பண்ணிக்கிட்டு இருந்துச்சு. பேத்தியோட வளைகாப்புக்கு எந்தச்சேலை கட்டப் போறன்னு
அப்ப அம்மாயிசொல்லிச்சி அது என் இஸ்டம் யாரு வாங்கிக்குடுத்ததைனாலும் கட்டுவேன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு அவ கேட்டா ஏ அம்மாயி மூத்த மகன் எடுத்ததையா இல்ல மத்த மகனுக குடுத்ததையா இல்ல மூத்த பேரன் குடுத்த காசுல எடுத்ததையான்னு . அப்ப அம்மாயி சொல்லிச்சி மூத்த பேரன் குடுத்தகாசில எடுத்த சீலைய பொங்கலுக்குக் கட்டிட்டேன் அதுபோகத்தான் நாலு சீல இருக்கு அதுல எதைக்கட்டுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்குறேன்னு. அதுல ஒரு சேலை பட்டுச்சேலை அதுவும் ஒரு மகன் எடுத்துக் குடுத்ததுதேன். அது பட்டுச் சேலைன் றதுனால அம்மாயி அதைத்தான் கட்டும்னு ஒரு கணக்குப் போட்டிருந்தா பேத்தி.
இதுக்கு நடுவில ரெண்டு நாள் அவ அவளோட அம்மா ஊருக்குப்போயிருந்தா. வளைக்காப்புக்கு ஏற்பாடுகளைப்பண்ண. ஆனா இவன் அம்மாயி கூடவேதான் இருந்தான் அம்மாயி முடியாதப்பவும் அவனுக்கு நல்லா சமைச்சிப் போட்டுக்குக் கிட்டு இருந்துச்சு.இவனும் சந்தோசமா இருந்தான் தெனம் அம்மாவுக்கு போன் போட்டு அம்மாயி கூடப்பேசச் சொன்னான். அதுல அம்மாயிக்கு ரொம்ப சந்தோசம். அன்னிக்கி வளைகாப்புநாள். எல்லாரும் வளைகாப்புக்குக் கெளம்பிக்கிட்டு இருந்தாங்க. அம்மாயியோட பேத்தி மொதல்லயே அங்க போயிட்டா. வேலைகளைக் கவனிக்க . கொஞ்சநேரத்துல அம்மாயி இவனையும் கூப்புட்டுக்கிட்டு அங்க போச்சு. அங்க இருந்த பேத்தி அம்மாயியப் பாத்தா அது ஒரு சேலைக்கவர் வைச்சி ருந்துச்சு. அதை வளைகாப்பு நடக்குற பேத்திக்கு குடுத்துச்சு அதைதொறந்து பாத்தா அது இவ அம்மாயி கட்டும்னு நெனச்ச பட்டுச்சேலை புத்தம்புதுசா வாங்கிட்டு வந்து குடுத்தபடி இருந்துச்சு.
அப்பத்தான் கவனிச்சா அம்மாயி புதுசா ஒரு சேலை கட்டிருந்துச்சு சுங்கடிச்சேலை காட்டன்ல அழகா நல்லா பாடர் வைச்சி. அப்ப ஒன்னும் கேக்கல லேசா சிரிச்சா. என்னமோ அம்மாயி செஞ்சிருக்கு நமக்குத் தெரியாமன்னு சரி அப்புறம் வீட்டுக்கு வந்ததும் கேட்டுக்கலாம்னு விட்டுட்டா.
அப்புறமா வீட்டுக்கு வந்தவன்ன அம்மாயிக்கிட்ட கேட்டா ஏன் அம்மாயி பட்டுச்செலை தான் கட்டுவன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் பாத்தா அதை அந்தப்பேத்திக்கிக் குடுத்துட்ட. இப்பப்பாத்தா புதுசா காட்டன் சேலை கட்டிருக்கன்னு கேட்டவன்ன அம்மாயி சொல்லிச்சி அத இவன் கிட்டக் கேளுன்னு . இவன் சொன்னான் அக்கா( இவனுக்கு அது அக்கா பெரியம்மா மகன்றதால) அம்மாயிக்கி எங்கம்மா போன் பண்ணிச்சி அப்ப அம்மாயி சொல்லிச்சி மகன் பிள்ளை சேலை எடுக்கச்சொல்லி 2000 ரூ குடுத்துருக்கான்னு , அதுக்கு அம்மா சொல்லிச்சி அம்மா இப்ப என் மகன் செல்போன்ல சேலை காமிப்பான் அதுல எது புடிக்குதுன்னு சொல்லுங்கன்னு. அதே மாதிரி நானும்காமிச்சேன் செல்போன்ல. அதுல அம்மாயிக்குப்புடிச்சதுதான் அம்மாயி இப்பக் கட்டிருக்குற சேலை . அம்மாயி சொன்னவன்ன நான் ஆன்லைன்ல ஆடர் பண்ணினேன் . அது நேத்துதான் வந்துச்சு அப்ப எங்க அம்மா சொல்லிச்சி அம்மாயிக்கிட்ட நீ இதைத்தான் கட்டிக்கனும் ஏன்னா என்னால வரமுடியல . இந்தச்சேலைய நீ கட்டிக்கிட்டா நான் ஒன்னோட இருக்குற மாதிரி நான் சந்தோசப்படுவேன் இதோட நீ அங்கபோனோ நானும் அங்க வந்தமாதிரி ஒரு சந்தோசம் எனக்குக்கெடைக்கும் அந்த சந்தோசத்தை எனக்குக்குடு அம்மான்னு சொல்லிச்சி அதைக்கேட்டு அம்மாயிக்குக் கண் கலங்கிடுச்சுஅதான் அதைக்கட்டிக்கிட்டு அங்கவந்துச்சுன்னு சொன்னான்.
அப்ப அம்மாயி சொல்லிச்சி நான் வாழ்ந்து அனுபவிச்சவ. எனக்கு எல்லாம் முடிஞ்சிருச்சு இன்மே ஒங்க சந்தோசத்தைப்பாக்குறதுதான் எனக்கு சந்தோசம். வாழ வேண்டிய அந்தப்பேத்தி பட்டுச்சேலையக்கட்டுறதுதான் சரி. அதுவும் போக என்னோட இளைய மக அதான் இவனோட அம்மா அங்கப்பாவம் ஒடம்பு சரியில்லாம இங்க வரமுடியாம தவிக்கிற அவளோட ஆசையையும் நெறவேத்தி அவளையும் சந்தோசப்படுத்திப் பாத்தேன். அதுதான் இந்தக்கட்டைக்கி சந்தோசம்னு சொல்லி கண்ண தொடச்சிக் கிச்சி. இவனும் அந்த தாய்களின் பாசத்தப் பாத்து நெகிழ்ந்து கண்ணத் தொடச்சிக்கிட்டான்.
நன்றி : அ.முத்துவிஜயன்