வெகு நாட்களுக்கு பிறகு வாசிப்பு விமர்சனம் செய்கிறேன். வாசிப்பு பழக்கம் விட்டு விட கூடாது என்பதற்காக சிறு புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன்.
தேநீர் இடைவேளையில் 5 நிமிடங்களிலேயே வாசித்து முடிக்கக்கூடிய மிகச்சிறிய புத்தகம் தான் இது. சிறிய கதையில் பெரிய தத்துவத்தை கூறியுள்ளார்.
மரி என்கிற 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வழி தவறி செல்கிறாள். ஒழுங்காக படிக்காமல், முறையாக பள்ளிக்கு வராமல், யாரையும் மதிக்காமல் இருக்கின்றவள் தான் மரி.
எல்லா ஆசிரியர்களும் அவளை பள்ளியை விட்டு TC கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பேசி கொள்ள, அப்பள்ளியில் பணி புரியும் ஒரு ஆசிரியர் தம்பதி அவளை பார்த்துப் பேசி அதன் பிறகு என்ன நிகழுகிறது என்பது டங்கன் இந்த கதை.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த இரண்டு விஷயங்கள்
1. ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வைக்கும் அன்பு அவர்களிடத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கும். எவ்வளவு கடுமையான சூழ்நிலையையும் கடந்து வர ஒருவரின் அன்பு போதுமானது.
2. மரி : நீங்க என்ன கேட்ருக்கணும் சார், ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அரைஞ்சு கேட்க்கணும் சார்?
"அன்பு செலுத்துறவங்களுக்குத்தானே அதட்டிக் கேட்கவும் அதிகாரம் இருக்கு ?" சிறிய புத்தகத்தில் இவ்வளவு நுணுக்கமான கருத்தை பிரபஞ்சன் சொல்லி இருக்கிறார்.
இந்த வருடம் 100 புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று இலக்கை வைத்தேன். ஆனால் வெவ்வேறு காரணங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
இந்த வருடத்தில் மீதமுள்ள 69 நாட்களில், தினம் ஒரு புத்தகம் / இரண்டு புத்தகம் என 100 என்ற இலக்கை முடிக்க முடிவு செய்துள்ளேன்.
நூல் : மரி என்கிற ஆட்டுக்குட்டி ஆசிரியர் : பிரபஞ்சன் பக்கங்கள் : 15 பதிப்பகம் : நன்செய் பிரசுரம் விலை : ₹5