புத்தகத்தின் தலைப்பு : டி.என்.பி.எஸ்.சி தேர்வு GROUP IV

By News Room

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஒருவர் எப்படித் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம், எப்படி அதற்காக திட்டமிடுவது, எந்தெந்த விஷயங்களில் இன்னும் கூர்மையாக மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையெல்லாம் இந்த நூலின் தொகுப்பாசிரியர், அவரின் முன்னுரையிலேயே தேர்வரின் விரல் பிடித்துக்கொண்டு பரிவோடு சுட்டிக்காட்டுகிறார்.

இந்தக் கையேட்டில் பொதுத்தமிழ், பொது அறிவு என இரு பெரும் பிரிவுகளில் பயிற்சிக்கான திட்டங்களை ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர். முதல் பிரிவில், திருக்குறள் தொடர்பான பயிற்சிகள், தமிழ் இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும், தமிழ் இலக்கணம் ஆகிய பகுதிகளைச் சேர்த்திருக்கின்றனர். இரண்டாவது பிரிவில், பொது அறிவியல், புவியியல், இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும், நடப்பு நிகழ்வுகள், மாதிரி வினா - விடைகள் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Visit: store.hindutamil.in/products/

விற்பனை விலை :(Rs.500.00 + shipping) தேவையெனில்     Gpay: 74012 96562  என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.

 

.
மேலும்