வட்டியும் முதலும் - ராஜு முருகன்

By saravanan

திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவரது வட்டியும் முதலும் நாவல் தான் முதலில் விகடனில் பிரசுரமாகியது.

அதற்கு பிறகு தான்  வீரயுக நாயகன் வேள்பாரி விகடனில் வெளி வர ஆரம்பித்தது இதை தொடர்ந்து விகடனை வாசிப்பவர்கள் நன்கு அறிவார்கள். எனக்கென்னவோ இப்போது வேள்பாரி நாவலை இப்போது நினைத்தால் கூட மலைப்பாகவே உள்ளது.

இத்தனைக்கும் நான் நூலாக வந்த பின்னர் தான் படித்தேன் ஆனால் தொடராக விகடனில் வந்த போது படித்தவர்களுக்கு இது இன்னும் மலைப்பாக இருக்கலாம் ஒரு மிகப்பெரிய சவால் நிறைந்த நாவல் அது என்பது நிதர்சனமான உண்மை. இனி நூல் குறித்த விமர்சனத்துக்கு செல்வோம்.

 பசியில் தொடங்குகிறார் நாவலை இந்த இளைஞனின் பசி எத்தகையது  கொடிது கொடிது இளமையில் வறுமை

எனும் ஔவையார் வரிகளே நினைவக்கு வருகிறது

பெண்கள் தான் எத்தகையவர்கள் இவ்வளவு பாசமும் அன்பும் எங்கிருந்து தான் வருகிறது இவர்களுக்கு.

 புரட்சி திருமணம், குடிபோதை  படுத்தும் பாடு , சினிமா வாழ்க்கை படுத்தும் பாடு, தற்கொலை பற்றிய எண்ணங்கள் என ஒரு ரவுண்டு வருகிறார் ராஜு முருகன்.

 மனிதர்களை படிப்பது என்பது அவ்வளவு அசாதாரணமானது ஒரு நேரம் வியப்பு, ஒரு நேரம் பயம், ஒரு நேரம் பொறாமை, என்று பல்வேறு விதமான உணர்வுகளை மக்கள் நமக்கு ஊட்டுவார்கள்.

அதனால் வடக்கை கைப்பற்றிய வர்களுக்கு தெற்கை கைப்பற்றுவதில் மிகப்பெரிய அதிர்ச்சி பயம் கலந்த குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ கோவிலுக்கு போகிற அதே கூட்டம் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகளுக்கும்  போகிறது அதே கூட்டம் ரம்ஜான் நேரத்தில் நோன்பு கஞ்சியும் குடிக்கிறது.   அனைத்தும் செய்கிற அதே கூட்டம் பெரியார் கூட்டங்களிலும் நிரம்பி வழிகிறது. பெரியார் சாமி கும்பிடாதேன்னு சொன்னாரு இவனுங்க என்னனா சாமியும் கும்பிடுறாறுங்க ஆனால் பெரியார் மேல் பழியை சுமத்தினால் மொத்தமா திரண்டு வராங்க இவங்களை புரிஞ்சிக்கவே முடியலையே என்று யோசிக்கிறது ஒரு கூட்டம் நான் இங்க அரசியலை பேசலைங்க எது பெரியார்,எது ஆன்மீகம் என்று தெற்கு மனிதர்களுக்கு நன்கு புரிந்து இருக்கிறது.

 எனக்கு இன்றைக்கும் இறைவன் மீது நம்பிக்கை இல்லை எத்தனை முறை தான் வாழ்வில் விழுந்தே கிடந்தாலும் இயற்கையின் உந்துததலால் யாரோ ஒருவரின் ஊக்கத்தால் எழுந்து நிற்க கை கெடுக்கும் போது தான் தோன்றுகிறது ஒரு வேலை இவர் தான் அவரா ? என்று நான் இன்றைக்கும் நாலாயிரத்தை நா பழக்கமாக்கி கொண்டவன் எழுந்தால் நாராயணா உட்கார்ந்தால் நாரயாணா தான் அவ்வளவு ஏன் நடமாடும் போதும் நாராயணா தான் அதே சமயம் எனக்கு குலதெய்வத்தின் மீது தனி ஈடுபாடு உண்டு வருடந்தோறும் ஆடி முதல் திங்கள் தொடங்கி ஐந்து திங்களில் என்றாவது ஒரு நாள் சர்வ நிச்சயமாக நான் எனது குலதெய்வத்தின் காலடியில் கிடப்பேன் என்ன காரணம் என்று கூட தெரியாது அங்க போனால் மனசுக்கு ஒரு நிம்மதி வரும் அது மட்டும் தான் எனக்கு வேண்டும் உலகின் எத்தனையோ கோவில்களுக்கு போய் வந்தாலும் எனக்கென்னவோ குலதெய்வத்தின் கோவிலில் அடைந்த நிம்மதியை வேறெங்கும் அடைய முடியல.

சமீபத்தில் பூலோக வைகுண்டம் #திருவரங்கம் கூட சென்று வந்தேன் அப்படி ஒரு பிரம்மாண்டமான கோயில் அப்படி ஒரு அரங்கன் அப்படி ஒரு வீதிகள் திருவரங்கத்தின் ஒவ்வொரு மண்துகளும் #ஆழ்வார்கள் நடமாடிய மண்துகள் என்று எடுத்து உடம்பு முழுக்க பூசிக்க தோன்றியது அரங்கனை மனதிற்குள் வைத்து

ஒன்றும்மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான் * இன்றுமறப்பனோ? ஏழைகாள்! - அன்று கருவரங்கத்துட்கிடந்து கைதொழுதேன்கண்டேன் * திருவரங்கமேயான்திசை! என்று பூசிக்க தோன்றுகிறதே தவிர மனநிம்மதியை தரவில்லை. அரங்கன் அரங்கனாகவே திகழ்கிறார். அய்யனாரோ எனது தந்தை தந்தைதம்மூத்தப்பன் போல் திகழ்கிறான். எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி * வந்துவழிவழிஆட்செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில் அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை * பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. என்று ஆழ்வார்களின் அருளிச்செய்த பாசுரங்களை நினையாமல் இருக்க முடியவில்லை.

ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி * வழுவிலா அடிமைசெய்யவேண்டும்நாம் * தெழிகுரலருவித் திருவேங்கடத்து * எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே. (2)

எந்தைதந்தைதந்தை தந்தைதந்தைக்கும் முந்தை * வானவர் வானவர்கோனொடும் * சிந்துபூமகிழும் திருவேங்கடத்து * அந்தமில்புகழ்க் காரெழிலண்ணலே. என்று நாலாயிரத்தில்  ஓர் ஓவியமாய் திகழும் பாசுரங்கள் இவையெல்லாம் எம் மனதில் நிழலாடுகிறது.

சமகால அரசியலை பிரித்து, பிரித்து சொல்லியிருக்கிறார் வணிகமயமாகி போன அரசியலை நேர்மையான அரசியல் புரிந்து கொள்ளபடமால் புறந்தள்ளபட்டு இருக்கும் அரசியலை நுட்பமாக சொல்கிறார் எழுத்தாளர் ராஜூ முருகன்.

பிரபல கட்சியின் பெயரையும் அதை தொடர்ந்து நடக்கும் சில உரிமை மீறல்கள், அநியாயங்கள் குறித்தும் விளாவரியாக விவரிக்கிறார்.

 கால்நடைகள் பராமாரிப்பு என்பது கிராமங்களில்  எத்தனை கொடுமையானது. அதுவும் அதுங்க கூடவே வாழ்க்கை என்பது அவ்வளவு துயரம் நிறைந்தது . ஆண் பெண் தோழமை என்பது காதல், காமம் கலக்காத தெள்ளிய நீரோடை அது ஒரு போதும் கலக்கமுறுவதேயில்லை ஆண் துவலும்போது பெண்ணும் பெண் துவலும் போதும் ஆணும் தோள் கொடுத்து தாங்கி நிற்கும் அற்புதமான உறவு.  கலைஞர்களின் பெருந்துயரம் வறுமை கொடிது கொடிது இளமையில் வறுமை என்பது மாதிரி தான் கொடிது கொடிது கலைஞர்களின் வறுமை இது தான் பிழைப்பு என்று நம்பி விட்டு கடைசி வரை கலையே நம்பி கெடக்கும் சென்மங்கள் அவை.

மனித வாழ்க்கை தான் எத்தனை எத்தனை வித்தியாசமானது ஒரு நேரம் காதல், ஒரு நேரம் பயம், ஒரு நேரம் நெருடல், ஒரு நேரம் அவமானம் என்று மனிதத்தின் அத்தனை விதமான உணர்வுகளிலும் ஊடுருவி அத்தனை முகங்களையும் காட்சி படுத்திருக்கிறார் இந்த நாவலில் ராஜு முருகன்.

 பசியினால் எழுதப்பட்ட இந்த நாவல் முழுக்க முழுக்க படிக்க படிக்க சுவராஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது.

இளைஞர்கள் படும் பாட்டினை இந்த நாவல் முழுக்க சொல்லியிருக்கிறார் ராஜு முருகன்.

இந்த சமூகம் அவருக்கு கொடுத்தவற்றை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்.

நன்றி:  தினேஷ் கண்ணா

.
மேலும்