ஆடி அமாவாசை முன்னோர்கள்..எப்படி வரவேற்கலாம்? என்ன தானம் தரலாம்?

By Senthil

ஆடி மாதம் பிறந்துவிட்டது. ஆடி மாதம் என்றாலே கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும், இந்த மாதத்தில் வரும் அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த  ஆடி அமாவாசை வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரப்போகும் நம்முடைய முன்னோர்களை எப்படி வரவேற்பது? ஆடி அமாவாசை நாளில் என்ன தானம் கொடுப்பது என்று பார்க்கலாம். 

நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. 

ஆடி அமாவாசை.. பவானி கூடுதுறையில் தர்ப்பணம் அளித்து புனித நீராட அனுமதி உண்டா? பித்ரு தர்ப்பணம் செய்யும் நாட்கள் பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும். 

இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும். ஆடி அமாவாசை தர்ப்பணம் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். 

நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. 

அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள். எள் தானம் எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. 

முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய முன்னோர்களின் ஆசி என்றும் நமக்கு கிடைக்கும்.

.
மேலும்