அக்காலம் முதல் இன்று வரை காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாக ஆடிப்பெருக்கு இருந்து வருகிறது. இந்த ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இன்றளவிலும் இருக்கிறது. ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக இருக்கிறது. இத்தகைய மகத்துவமான நாளாக இருக்கக்கூடிய இந்த ஆடிப்பெருக்கில் செய்ய மறக்கக்கூடாத 5 விஷயங்கள் என்னென்ன?*
ஆடிப்பெருக்கு அன்று குடும்பத்தோடு நீர் நிலைகளுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. மேலும் மங்களப் பொருட்களை நீரில் விட்டு அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கிறது. குடும்பத்தோடு மரத்தடிகளில் அமர்ந்து உணவு சமைத்து, ஆடிப்பாடி மகிழ்ந்து, உணவு உண்டு மகிழும் நன்னாளாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற வியாழன் கிழமை வரக்கூடிய இவ்வருட ஆடிப்பெருக்கு அன்று தவறாமல் இந்த ஐந்து விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.*
ஆடிப்பெருக்கு அன்று முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு துவங்குவது வெற்றியைத் தரும்.*
*பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு வேப்பிலை மாலை சாற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள்.*
ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது.*
*அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். புதிதாக சரடு அணிபவர்களும் இந்நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம்.* காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை நல்ல நேரமாக இருக்கிறது.*
*இந்த நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது.*
ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் மூவர் அல்லது ஐவருக்கேனும் மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. தாம்பூலத்தோடு மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் கொடுத்தால் மாங்கல்ய பலம் நீடிப்பதோடு மட்டுமல்லாமல், குல விருத்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்.*
ஆடிப்பெருக்கில் நல்ல காரியங்களை துவங்கலாம், சுப பேச்சு வார்த்தைகளை நிகழ்த்தலாம்.*
ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் குறையாமல் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் சிலவை உண்டு. அவற்றை முன்கூட்டியே வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஆடிப்பெருக்கு அன்று இவையெல்லாம் குறைவாக இல்லாமல் நிறையுடன் இருந்தால் வறுமை ஏற்படாமல் ஏழேழு பிறவிக்கும் தன, தானியத்திற்கு பஞ்சம் இல்லாத வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை எனவே அத்தகைய பொருட்களாக இருக்கக்கூடிய அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல், எண்ணெய் ஆகியவற்றை வாங்கி நிரப்பி வைக்க மறக்க வேண்டாம்.*
கடைசியாக ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் குண்டு மஞ்சள் ஆகும்.*
அதிக வசதி படைத்தவர்கள் அன்றைய நாள் பொன்னும், பொருளும் வாங்கி குவிப்பார்கள். ஆடிப்பெருக்கில் வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை எனவே நகைக்கடைகளில் அன்றைய நாள் கூட்டம் அலைமோதும். நம்மால் அவற்றை வாங்க முடியாவிட்டாலும் குண்டு மஞ்சளை வாங்கி வைப்பது அதற்கு இணையான பலன்களை கொடுக்கும்.