ஆடி மாத சிவராத்திரி பலன்கள்

By saravanan

‘சிவயநம’ என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம். இதை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.

 

ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரும் பாக்கியத்தைப் பெற்றவர், நாரத முனிவர். அவரது தந்தையாக விளங்குபவர், படைப்பு த் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மதேவ ன் ஆவார். 

 

ஒவ்வொரு நொடியும் நாராயணரின் நாமத் தை உச்சரித்தபடியே இருக்கும் வரத்தைப் பெற்றவர், நாரதர். அவருக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் எழுந்தது. நேராக தன் தந்தையிட ம் சென்று, தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார். 

 

“தந்தையே.. சிவ நாமங்களில் உயர்ந்தது ‘சிவாயநம’ என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்” என்றார். 

 

பிரம்மா நாரதரிடம், “நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்” என்றார்.

 

நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகி ல் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டார். நாரதர் அந்த சந்தேகத்தைக் கேட்ட மறுநொ டியே அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந் தது. இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சி யாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச் சென்று, “தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார். 

 

“நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா. 

 

நாரதரும் ஆந்தையிடம் சென்று இதே கேள் வியைக் கேட்க, அதுவும் வண்டைப் போல வே, கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார். மீண்டும் பிரம்மாவிடம் சென்று, “என்ன இது சோதனை?” என்று கேட்டார். 

 

பிரம்மனோ, “நாரதா.. உனக்கு இன்னும் விளங்க வேண்டும் என்றால், அதோ அங்கி ருக்கும் வீட்டில் இப்போதுதான் ஒரு கன்றுக் குட்டி பிறந்துள்ளது. அதனிடம் கேள். பதில் கிடைக்கும்” என்றார். 

 

நாரதரும், கன்றிடம் சென்று அதே கேள்வி யைக் கேட்டார். அப்போது தான் பிறந்திருந். த கன்று, உடனடியாக தன் உயிரை விட்டது. நாரதருக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார். 

 

‘இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதியே இப்படி என்றால், இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்’ என நினைத் தார் நாரதர்.

 

அப்போது, அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம் “கன்றும் இறந்து விட்டதா?. சரி பரவாயில் லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையிட ம் போய் இதற்கு விளக்கம் கேள்” என்றார். 

 

இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், "பிரம்ம தேவா என்ன இது? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால், குழந்தையின் இறப்புக்கு காரணமானவனாக மாறிவிடுவேனே,” என்றார். 

 

இருந்தாலும் பிரம்மா விடவில்லை. “இது வரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது, அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்.

 

நாரதர் கை, கால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசிய து. “நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன்பின் கன்றாகப் பிறந்தேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று குழந்தை கூறியது. 

 

நாரதர் இப்போது பிரம்மனிடம் வந்தார். நார தரிடம் இருந்த தெளிவைக் கண்டு பிரம்ம தேவர் கூறினார். “சிவாயநம என்பதை ‘சிவயநம’ என்றே உச்சரிக்க வேண்டும். 

 

‘சி’ என்றால் சிவம்; ‘வ’ என்றால் திருவருள், ‘ய’ என்றால் ஆன்மா, ‘ந’ என்றால் திரோத மலம், ‘ம’ என்றால் ஆணவமலம். திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு அதை சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். 

 

‘சிவயநம’ என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம்” என்றார் பிரம்மன். இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார்.

.
மேலும்