களத்திர தோஷம்....
வெள்ளிக்கிழமை நாள் அன்று ஒரு வாழை மரத்தினை கொண்டு வந்து அதற்கு நீரால் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு அந்த மரத்திற்கு பூவிட்டு நேவேத்தியம் வைத்து தாம்பூலம் வைத்து சூடம் காட்டி தூபம் காட்டி களத்தின் தோஷம் நீங்க விநாயகர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் மற்றும் நவகிரகங்களை மனதில் தியானித்து யார் களத்தின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவரோ அவர் அந்த வாழைமரத்துக்கு மஞ்சளால் ஆன மாங்கல்யம் ( தாலி) தன் மனைவி என் பாவித்து கட்ட வேண்டும்.
இதை செய்யும் போது சம்பந்தப்பட்ட நபரின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்த வேண்டும். பிறகு 2 1/2 நிமிடங்கள் கழித்து அந்த வாழை மரத்தை தாலி கட்டிய அந்த நபர் கத்தியால் ஒரே வெட்டாக வெட்ட வேண்டும்.பிறகு 2 1/2 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த அறுபட்ட வாழைமரத்துக்கு தூபம் அவற்றை ஓடும் நீரிலோ ஆற்றிலோ அல்லது குளத்திலோ வீசி விட வேண்டும்.பிறகு அந்த நபர் தான் அணிந்திருந்த ஆடைகளை அதே இடத்தில் வீசிவிட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நேராக அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று நெய்தீபமிட்டு தன் பெயரில் களத்திர பிரார்த்தி வேண்டி அர்ச்சனை செய்ய வேண்டும்.நவகிரங்களுக்கு நெய் தீபமிட வேண்டும்.பிறகு ஆலய அருகாமையில் உள்ள ஏழை எளிய நபர்களுக்கு தங்காளால் இயன்ற ஏதேனும் அன்னதானம் வழங்கினால் போதும். அதிவிரைவில் களத்தின் தோஷம் குறைந்து திருமணம் சீக்கிரம் கைகூடும்.
பல்வேறு பட்ட சாபங்களை போக்க வல்லது இந்த வாழைமரம்.ஆகவே தான் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் வாழைமரமே கட்டப்படுகிறது.
இது நிதர்சனமான உண்மை.இதுவே களத்திர பரிகாரம். இது ராஜ முனி சுந்தரானந்தர் கூறிய கர்ம சாந்தி பரிகாரமாகும். இது கை கண்ட பலன் தரும்.இதுவரை எவரும் வெளியிடாத பரமரகசியமாகும். களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் கள் இந்த எளிய பரிகாரம் நீங்களே செய்யலாம் அல்லது ஜோதிடர் மூலமாக செய்யலாம்.