சிவமும் அருளும் இரண்டும் எப்போதும் பிரியாமல் இருக்கும்.இதை தாதான்மிய சம்பந்தம் என்கிறது சாத்திரம்.இதை உருவகப்படுத்தி 'அம்மையும் அப்பனும்' என்று திருமுறைகள் கூறுகின்றன. அப்பனைப்பற்றிக் கூறினால் அது அம்மையைப் பற்றிக் கூறியதாகவும் அம்மையைப் பற்றிக் கூறப்படும் இடங்களில்,அப்பனைப்பற்றிக் கூறியதாகவும் கொள்ளப்படும்.
உயிர், சிவத்தை நேரடியாக அறியுமா என்ற கேள்விக்கு திருவருளின் துணையின்றி சிவத்தை உயிரால் அறிய முடியாது என்கிறது சாத்திரம்.
எனவே " சி " எனும் சிவத்தை " வ" எனும் திருவருள் காட்ட, உயிர் சிவத்தை அறியும். " அம்மையே அப்பா ஒப்பிலா மணியே " என்பது திருமுறை.
எனவே நடராசப் பெருமான் எப்போதும் தனித்து நிற்பதில்லை. அன்னை அருகே நிற்கிறாள்.உயிரானது அன்னை காட்ட, பெருமானைக் காண்கிறது என்கிறது சாத்திரம்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருள்மிகு தக்ஷ்ண காசி காலபைரவர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ காலபைரவர்.
தமிழகத்தை ஆண்ட ஆதித்யவர்வர்மன் எனப்படும் அதியமான் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்பெற்ற ஆலயம்.
காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட பைரவர் சிலை.காசிக்கு நிகரான காலபைரவர் ஆலயம்.
காலபைரவரை சுற்றி 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் வழிபடுமாறு அமைந்துள்ளது சிறப்பாகும்.
தேய்பிறை அஷ்டமி மற்றும் ராகுகாலங்கள குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தின் போது பூசணிக்காயில் மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தலவிருட்சத்தின் அருகே நேர்ந்து வைப்பார்கள். சிவப்புமிளகாய் சமர்ப்பிக்கும் பழக்கமும் உண்டு.
மூலவர் பைரவர் முன் வாகனமாக நாய் மற்றும் நந்தி உள்ளது. எல்லா மாநிலங்களிலும் இருந்து திரளாக வருகின்றனர்.
ஓம் ஸ்ரீ தக்ஷ்ண காசி காலபைரவாய நமஹ