சிரஞ்சீவி அந்தஸ்தை பெற்றவராக திகழக் கூடியவர்தான் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
இன்றளவும் இந்த பூலோகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீராமா என்ற திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் சூட்சுமமாக வீற்றிருப்பார் என்று கூறப்படுகிறது.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நாம் வணங்குவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய காரிய தடைகள் விலகும், கடன் பிரச்சினைகள் தீரும், நம்மை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
**கொடுத்த பணம் திரும்ப கிடைக்க**
நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக பிறருக்கு கடனாகவோ அல்லது உதவியாகவோ தந்து இருப்போம். அதை அவர்கள் திருப்பி தராமல் நம்மை ஏமாற்றும் நோக்கில் இருந்தாலும் அல்லது அவர்களால் திருப்பித் தர இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் அதனால் பாதிக்கப்பட போறவர்கள் நாம்தான்.
இப்படி பலரும் பல விதங்களில் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆஞ்சநேயரை முழுமனதோடு நம்பி தொடர்ச்சியாக 43 நாட்கள் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையான வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை இந்த வழிபாட்டை தொடங்கலாம் அல்லது மூல நட்சத்திரம், அமாவாசை போன்று நாட்களிலும் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு புதிதாக வாங்கி வந்த கல்லுப்பு வேண்டும்.
வீட்டில் பூஜையறையில் ஒரு பிளாஸ்டிக் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கோபுரம் போல கல்லுப்பை கொட்டிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து ப்ளூ கலர் பேனாவை பயன்படுத்தி யார் நமக்கு பணம் தர வேண்டுமோ அவர்களுடைய பெயரை எழுத வேண்டும்.
எத்தனை நபர்கள் தரவேண்டியதாக இருந்தாலும் அத்தனை நபர்களின் பெயர்களையும் அந்த பேப்பரில் எழுத வேண்டும். இந்த பேப்பரை அப்படியே கோபுரமாக கொட்டி வைத்திருக்கும் கல்லுப்பின் மேல் வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரே ஒரு மாவிளக்கை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவிளக்கை அந்த பேப்பரின் மேல் வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
ஹனுமன் சாலிசா என்னும் பாடல் இருக்கிறது. அந்தப் பாடலை ஒன்பது முறை படிக்க வேண்டும். அதை படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒன்பது முறை தொடர்ச்சியாக அந்த பாடலை ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். அப்படி கேட்கும் பொழுது முழுமனதோடு ஆஞ்சநேயரை மட்டுமே நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்பது முறை கேட்டு முடித்த பிறகு உங்களுடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 43 நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தினமும் மாவிளக்கை மட்டும் புதிதாக வைக்க வேண்டும். உப்பு, பெயர்கள் எழுதிய பேப்பர் அது அப்படியே இருக்கட்டும்.
ஒவ்வொரு நாளும் ஏற்றிய மாவிளக்கை மறுநாள் கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். 43 நாட்கள் கழித்து கல் உப்பை தண்ணீரில் கரைத்து அந்த பேப்பரையும் தண்ணீருக்குள் போட்டு நன்றாக கரைத்து அதை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
தினமும் அனுமன் சாலிசா ஒன்பது முறை படிக்கவோ, கேட்கவோ செய்ய வேண்டும்.
உப்பை வைத்து இந்த முறையில் நாம் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது ஆஞ்சநேயரின் அருளால் நாம் கொடுத்த பணம் கொடுத்த இடத்தில் இருந்து எந்தவித தங்கு தடையும் இல்லாமல் திரும்பி வரும்.