தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால்?

By saravanan

முருகனின் கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம்முடன் நேர்மறை ஆற்றல் பரவி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும் மற்றும் நாம் செய்யும் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி முருகனின் பெயரால் அனைத்து நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். வீட்டில் தரித்திரம், செய்வினை, பில்லி, சூனியம் போன்றவை அடியோடு அழிந்து விடும்.

சொல்லப்போனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பரவும். லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மன அமைதி உண்டாகும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும் உடலும் வலிமையாக இருக்கும்.

முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதால், அந்நாளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தை படித்தால், நினைத்துக் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அதுபோல, சஷ்டி விரதம் நாளிலும் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசத்தை படித்தால் நடக்காது என்ற நினைத்த காரியங்கள் கூட விரைவில் நடக்கும்.

தீய சக்திகளிடமிருந்து விலகி இருக்க கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம் கந்த சஷ்டி கவசம் என்பது ஒரு சாதாரண பக்தி பாடல் அல்ல என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் சர்வ சக்திகளும் அடங்கி இருக்கிறது. இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய இந்த மந்திர பாடலை தினமும் மனதார பாடினால், முருகனின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கும் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

.
மேலும்