கார்த்திகை மாத பிரதோஷ தின தரிசனம்

By News Room

ஈஸ்வர தியானம் மந்திரம்

 

நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

 

சிவாய நம ஓம் சிவாய நம:

சிவாய நம ஓம் நமசிவாய

சிவாய நம ஓம் சிவாய நம:

 

சிவாய நம ஓம் நமசிவாய

சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்

ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம

ஓம் சிவாய சங்கரா

 

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

 

இன்று,

 

வெள்ளிக்கிழமை !

 

சோபகிருது வருடம் !

 

கார்த்திகை மாதம்

 

08ம் தேதி

 

நவம்பர் மாதம்:

 

24ம் தேதி !

 

(24-11-2023)

 

சூரிய உதயம் : 

காலை : 06.15 மணி அளவில் ! 

 

இன்றைய திதி :

 

இன்று மாலை 06.51 வரை துவாதசி ! பின்பு திரியோதசி !!

 

இன்றைய நட்சத்திரம் :

 

இன்று மாலை 04.18 வரை ரேவதி பின்பு அஸ்வினி !

 

யோகம் :

இன்று காலை 06.15 வரை சித்தயோகம் !

பின்பு அமிர்தயோகம் !!

 

இன்று

 

சம நோக்கு நாள் !

 

நல்ல நேரம் : 

 

காலை : 09-15 மணி முதல் 10-15 மணி வரை !

 

மாலை  : 04-45 மணி முதல் 05-45 மணி வரை !!

 

சந்திராஷ்டமம் :

பூரம் ! உத்திரம் !!

 

ராகுகாலம் : 

காலை : 10.30 மணி முதல் 12-00 மணி வரை !

 

எமகண்டம் 

பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

 

குளிகை :

காலை  : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

 

சூலம் :  மேற்கு !  

 

பரிகாரம்: வெல்லம் 

 

  ஹரி ஓம். நம சிவாய

 

*வெள்ளிக்கிழமை ஹோரை*

 

 ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு.

 

இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள்.

 

இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும்.

 

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளைத்தான் குறிக்கும்.

 

அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும்.

 

தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும்.

 

அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தை குறிக்கும்.

 

இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள்.

 

மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும்.

 

திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள்.

 

மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவ னையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

 

பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள்.

 

சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது.

 

இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.

 

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.

 

அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும்.

 

அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

 

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும்.

 

அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும்.

 

மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

 

*ஸ்ரீ சிவ அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!*

 

*சௌஜன்யம்..!*

 

*அன்யோன்யம் .. !!* 

 

*ஆத்மார்த்தம்..!*

 

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

 

*அடியேன்*

*ஆதித்யா*

.
மேலும்