கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், ஈரோடு

By nandha

நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க வும், பித்ரு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் மன நோய்க ளை நீக்கி மனஅமைதி தரும் தலமாக உள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்.கொடுமுறை மகுடேஸ்வரரை வழிபட்டால் சகல பிணிகளும் நீங்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.

 

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக் கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண் டபங்களும் கட்டி, பல திருப்பணிகளைச் செய் தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடு முடி ஆயிற்று.

 

இன்றைக்கு பல பேருக்கு திருமணம் நடைபெ றாமல் தடை ஏற்படுகிறது. சிரமப்பட்டு திரும ணம் நடைபெற்றாலும் புத்திரபாக்கியம் கிடை ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ராகு கேது தோஷ ம் திருமணம், புத்திர பாக்கிய தடையைத் தருகிறது. இந்த தோஷங்களும் தடைகளும் நீங்க சிறந்த பரிகார தலமாக உள்ளது கொடு முடி மகுடேஸ்வரர் ஆலயம்.

 

சிவன்,பிரம்மா, விஷ்ணு:

 

இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிரு க்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையி ன் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை மகுடேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.

 

தல வரலாறு

 

மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனு ம், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திரு த்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கி றது. ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பக வானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். 

 

ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்து க் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளா கி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொ ன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உரு வானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.

 

அமுதபுரி ஆலயம்

 

பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி' என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்' என்றும், கருடன் இத்தல இறைவ னை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி' என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன.

 

திருமண வரம் கிடைக்கும்

 

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. 

 

இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்கு கிறது. இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

 

ஆலய வழிபாடு:

 

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமு ம் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவி லில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிர ம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங் ளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. 

 

இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.

 

சுயம்பு லிங்கம்:

 

இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தி ன் மீது விரல் தடயங்களைக் காணலாம். அகத் தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போ து ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். 

 

மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நி தி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப் படும். 

 

அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியி ல் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது.

 

பிரம்மா:

 

இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறா ர்கள். வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. 

 

இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களு ம், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள் ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப் பதில்லை என்பது சிறப்பம்சம். 

 

இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட் டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழா விற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

 

மகாலட்சுமி அருள்:

 

பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெரு மாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளி ன் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலு க்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளு ம் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

 

மன நோய் தீர்க்கும் ஆலயங்கள்:

 

காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக் கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகா விஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும், மனநோயும் நீங்கும்.

 

நாக தோஷங்கள் நீங்கும்:

 

ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கி றார்கள். 

 

இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப் பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷ ங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகி றார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிப டுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

 

எங்கு எப்படி செல்வது:

 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்க ளில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது. கரூர் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடு முடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் எளிதாக வந்து செல்லலாம்.

.
மேலும்