நிம்மதியான தூக்கத்துக்கு ஸ்ரீவிஷ்ணு மந்திரம்!

By News Room

நிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய ஸ்ரீவிஷ்ணு மந்திரம்:

தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம்.

*ஸ்ரீ விஷ்ணு மந்திரம்* *அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்*: *ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்* *நாராயணம் க்ருஷ்ணம் *ஜயேத் துர் ஸ்வப்பன சாந்தயே*.

2)  காலையில் எழுந்த உடனே கண் விழித்தவுடன் முதன் முதலில் சொல்ல வேண்டிய மந்திரம். தன் இரண்டு உள்ளங்கைகளை பார்த்து  ஒரு தடவை இந்த ஸ்லோகத்தை சொல்லவும்.

*கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே ஸரஸ்வதி கரமூலே ஸ்திதா கௌரி ப்ரபாதே கர தர்ஸனம்*

3) விரைவில் திருமணம் நிச்சயமாக ஸ்லோகம் : இந்த ஸ்லோகத்தை திருமணம் ஆக வேண்டியவர்கள்  தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். *தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணாருக்மிணீ* *ப்ரியவல்லப விவாஹம் தேஹிமே* *ஸீக்ரம் வாஸுதேவ நமோஸ்துதே*. *ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்*

பொதுப்பொருள்: தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

.
மேலும்