இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
மந்திரம் :-
ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா