ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம்!

By saravanan

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானே மூலவராக அமைந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயமான, விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான, மிகப் பழமையான தலமான ஹேரம்ப மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலமான திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மணிமூர்த்தீஸ்வரம்.   உச்சிஷ்ட கணபதி உச்சிட்ட விநாயகர் மூர்த்தி விநாயகர்

உலகம் முழுவதும் சைவ வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும் அங்கு விநாயகப்பெருமானுக்கு ஒரு சந்நிதி நிச்சயம் இருக்கும். முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னே அந்தந்தக் கோயிலின் மூலவரை வழிபடுவது வழக்கம். அப்படிப்பட்ட விநாயகருக்கு என்று அமைந்திருக்கும் தனித்துவமான ஆலயங்கள் பல நம் நாட்டில் உண்டு.

அங்கு மூலவராக விநாயகரே எழுந்தருளியிருப்பார். அப்படிப்பட்ட ஆலயங்களில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகள் பல. வாருங்கள் அவற்றை அறிந்துகொள்வோம்.

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரில், உச்சிட்ட கணபதி மூலவராக அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் இதுவாகும். 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும் 'உச்சிஷ்ட கணபதி' அல்லது உச்சிட்ட கணபதி என்பது பிள்ளையார் 32 உருவ வேறுபாடுகளும் ஒன்று (எட்டாவது வேறுபாடு).

மூலவர் உச்சிஷ்ட கணபதி தனது இடது தொடையில் அவரது மனைவி நீலவாணி (நீலசரசுவதி) உடன் அவரது துதிக்கை நீலவாணியின் வயிற்றுப் பகுதியில் படியுமாறு அமைந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலின் தீர்த்தம், தாமிரபரணி ஆற்றின் ரிஷி தீர்த்தக் கட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பைரவ தீர்த்தம் கிணறு இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். வன்னி மரமும் பனை மரமும் இக்கோயிலின் தலவிருட்சங்கள் ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டி மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 65 இலட்சம் ரூபாய்க்கு புனரமைப்புப் பணித் திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னொரு காலத்தில், வித்யாகரன் என்ற அசுரன் பிரம்மாவை நினைத்து, கடும் தவம் புரிந்ததால், பிரம்மா அவர் முன் தோன்றினார். அவரிடம் வித்யாகரன் தனக்கு வரம் அருள வேண்டும் என்று கேட்க, பிரம்மாவும் வரம் அருள சம்மதித்தார். தனக்கு மரணமே ஏற்படக்கூடாது என்று வித்யாகரன் வேண்ட, மரணம் எல்லோருக்கும் பொதுவானது; எனவே வேறு வரம் அருள தயாராக இருப்பதாக பிரம்மா தெரிவிக்க, அப்படியானால் தன்னைக் கொல்ல வருபவர், தனியாக, ஆயுதங்கள் இல்லாமல், தன் துணைவியுடன் தன்னை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற வேண்டும்; அப்போது தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று கூற பிரம்மாவும் அவ்வாறே வரமருளினார்.

இது நடக்க சாத்தியம் இல்லாததால், தனக்கு மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதிய வித்யாகரன் தேவர்களை அதிகம் வருத்தினான். அவனால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட தேவர்கள் மும்மூர்த்திகளிடமும் அவனைப் பற்றி முறையிட, அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட மும்மூர்த்திகளின் யாகங்களினால், ஆதிபராசக்தி அவர்களின் முன் தோன்றி, அவர்களின் கோரிக்கையை ஏற்று, யாகத்திலிருந்து உச்சிட்ட கணபதியைத் தோன்றச் செய்தார். இதே வேளையில், பிரம்மாவும் தன் யாகத்திலிருந்து தன் மகளாக நீலசரசுவதி தோன்றுமாறு செய்ய, உச்சிட்ட கணபதிக்கும், நீலசரசுவதிக்கும் திருமணம் செய்து வைத்தனர். இச்சந்தர்ப்பத்தில் மும்மூர்த்திகளும், இந்திரனிடம், வித்யாகரனை உச்சிட்ட கணபதியுடன் இவ்வேளையில் போரிட வைத்தால் வித்யாகரனின் மரணம் நிச்சயம் என்று தெரிவிக்க, அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது.

வித்யாகரனும், உச்சிட்ட கணபதியுடன் போரிடச் சென்றவன், உச்சிட்ட கணபதி, நீலசரசுவதியுடன் தனித்திருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தவன், ஆயுதங்கள் இல்லாமல், தன் துணைவியுடன் இருக்கும் போது, உச்சிட்ட கணபதியின் தாங்க முடியாத ஒளிப் பிரகாசத்தால், மூர்ச்சையாகி மரணம் எய்தினான் என்பது புராண வரலாறு. அவ்வண்ணமே, உச்சிட்ட கணபதி நீலசரசுவதியுடன் இதே இடத்திலிருந்து எல்லோருக்கும் அருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த ஆலயம் 900 வருடங்கள் பழைமை வாய்ந்தது. ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில் நீளம் சுமார் 80 மீட்டர். அகலம் 40 மீட்டர். மூன்று பிராகாரங்கள்... எட்டு மண்டபங்கள்... என பிரமாண்டமாகப் பரந்துவிரிந்து காணப்படுகிறது இந்த ஆலயம்.

உச்சிஷ்ட கணபதி உச்சிஷ்ட கணபதி

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானுக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. தன் தேவியான வல்லபையைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கும் இறைவனின் திருவடிவம் காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.

முன்பெல்லாம் நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இங்கும் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் ‘மணிமூர்த்தீஸ்வரம்’ என்று வழங்கலாயிற்று.

இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

உச்சிஷ்ட கணபதி

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும் என்கிறார்கள்.

இங்கு, லிங்க ரூபமாக சிவபெருமான், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியன்,சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இங்கு கொடி மரத்திற்கு வடப் பக்கம் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும் அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பம்சமாகும். எனவே இங்கு பைரவரை வழிபட மன பயம் நீங்கி செல்வ வளம் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், சூத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

பிரார்த்தனை சிறப்பு :

விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.

கோயில் சிறப்புகள்:

ஆசியாவின் மிகப்பெரிய ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் இதுவாகும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை மாதம் முதல் தேதி) அன்று மூலவர் உச்சிஷ்ட கணபதி மீது சூரியக் கதிர்கள் விழும் அரிய நிகழ்வு இக்கோயிலின் சிறப்பாகும். 2016ஆம் ஆண்டு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், கொடிமரம் ஒன்று உள்ளது. மொத்தமுள்ள 3 பிரகாரங்களில், மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.இக்கோயிலின் நீளம் சுமார் 80 மீட்டர். இதன் அகலம் சுமார் 40 மீட்டர்.

விநாயகர் சதுர்த்தி ஒவ்வோர் ஆண்டும் ஆவணி (தமிழ்) மாதம் 10 நாட்கள், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி மூலவர் உச்சிஷ்ட கணபதி மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு ஆகியவை திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று, சங்கடஹர சதுர்த்தி அன்று, மாதந்தோறும் முதல் தேதி அன்று என முக்கிய நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பத்துநாள்கள் உற்சவம் நடைபெறுகிறது.  இங்கு விநாயகர் சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் விநாயகரை வந்து வணங்கி வழிபட்டல் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கி. மீ.தொலைவில் உள்ளது. ஓம் கணபதியே போற்றி

.
மேலும்