முருகப் பெருமானை எந்த நேரத்தில் தரிசித்தால் பிரச்னைகள் நீங்கும்?

By Tejas

*நாம் வழிபடும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அபிஷேக ஆராதனைகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி அபிஷேக ஆராதனைகளை செய்த பிறகு அந்தந்த தெய்வத்திற்கு ஏற்றவாறு அலங்காரங்களையும் செய்வது வழக்கம்.

*இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்த பிறகு பக்தர்களை தரிசிக்க அனுமதிப்பார்கள்.

*எந்த அலங்காரத்தை தரிசிப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் என்றும் நம்முடைய ஆன்மீகவாதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.*

*விஸ்வரூப தரிசனதை பார்த்தால் போதும் வெற்றி பெற

*அபிஷேகப் பிரியனாகவும், அலங்கார பிரியனாகவும் திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான்.

*சாதாரணமாக ஒரு சிலரின் இல்லங்களில் சிலைகளை வைத்து வழிபடும் பழக்கம் இருக்கும்.

*இந்த சிலைகளை வைத்து வழிபடுபவர்கள் அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வார்கள். அபிஷேகம் செய்யும் பொழுது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும்,

*அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும் பொழுதும் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

*மிகவும் விஷேசகரமான கோவில்களில் குறிப்பாக பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு நாம் செல்லும் பொழுது தெய்வம் எந்த அலங்காரத்தில் இருக்கிறார் என்பதை நாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

*ராஜா அலங்காரம், பாலசுப்ரமணிய அலங்காரம், பூ அலங்காரம் என்று பல அலங்காரங்கள் இருக்கின்றது.

*இதே போல் தான் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும் பொழுதும் அவரை நாம் எந்த அலங்காரத்தில் தரிசனம் செய்கிறோம் என்பதை குறிப்பாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

*அதற்கு ஏற்றார் போல் பலனையும் நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

*அப்படி நம்முடைய கஷ்டங்கள் தீர்வதற்கு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு முருகப்பெருமானை நாம் விடிய காலையில் தரிசனம் செய்ய வேண்டும்.

*அசுரர்களை வதம் செய்யும் பொழுது தெய்வங்கள் விஸ்வரூபம் எடுத்து வதம் செய்வார்கள். அந்த விஸ்வரூப தரிசனம் என்பது அசுரர்களை அழிப்பதற்காக தான் என்றாலும், அந்த விஸ்வரூப தரிசனத்தை நாம் காணும் பொழுது நம்மிடம் இருக்கக் கூடிய அசுரர்களான துன்பங்களும், கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி இன்பமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

*இந்த விஸ்வரூப தரிசனம் என்பது அனைத்து ஆலயங்களிலும் தரிசிக்க கூடிய ஒரு தரிசனமாக தான் திகழ்கிறது.

*இந்த தரிசனமானது விடியற்காலையில் அதாவது எந்த நேரத்தில் ஆலயத்தை திறக்கிறார்களோ அந்த நேரத்திற்கு சென்று தரிசிக்கும் தரிசனம் தான் விஸ்வரூப தரிசனம்.*

அதாவது முதல் நாள் இரவு எந்த அலங்காரத்தில் நடையை சாத்தினார்கள். அதே அலங்காரத்தில் காலையில் திறப்பார்கள்.

*காலையில் அபிஷேக ஆராதனை செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கும். அந்த நேரம் வரை அதே அலங்காரத்தில் தான் முருகன் இருப்பார். அந்த அலங்காரத்தில் நாம் தரிசனம் செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் பிரச்சனைகளும் துன்பங்களும் துயரங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

*இப்படி இவை அனைத்தும் நீங்கி விட்டாலே நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கையாக திகழும்,

*தொடர்ந்து இத்தனை நாட்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டு முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனத்தை தரிசிப்பவர்களுடைய வாழ்க்கையில் விஸ்வரூப வெற்றியை பெற முடியும்.

.
மேலும்