நாக சதுர்த்தி ஸ்பெஷல்...

By News Room

ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தி கொண்டாடப் படுகின்றது. 

வரலஷ்மி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளாகும்.

ஆடி மாதம் சுக்லபட்ச நாக சதுர்த்தி  விரதம் தொடங்குகிறது. 

ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். 

 *இன்றைய* தினம் *ஒன்பது* *நாக* *தேவதைகளான* 

அனந்தன்,  வாசுகி,  கிஷகாலன்,  அப்ஜன்,  மகரி  அப்ஜன்,  கங்குபாலன்,  கார்க்கோடகன்,  குளிஜன்,  பத்மன்  ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது மிகவும் நல்லது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். 

அவர்களில், கத்ரு என்பவளிடத்தில் பிறந்தவர்கள் தான் நாகர்கள். 

தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரு சாபம் கொடுத்தாள். 

அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. 

ரிஷிகள், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். 

அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக சதுர்த்தி தினம்.

இந்த நாக சதுர்த்தி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 

புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். 

கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். 

சர்ப்ப யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை, அருகம்புல், ஓமம், வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், சேர்க்கின்றனர்.

ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். 

அதேபோல் சிவபெருமான் நாகருடன் இருக்கும் ஸ்தலத்தை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். 

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். 

உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். 

எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

வீட்டில் நாகர் விக்ரஹம் இருந்தால் முதலில் சாளக்கிராம பூஜையுடன் நாகருக்கும் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி நைவேத்தியம் செய்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள்.

பின் நாராயணாய சூக்தம் விஷ்ணு சூக்தம் சர்ப்ப சூக்தம் ஸ்ரீசூக்தம் துர்கா சூக்தம் ஸ்ரீருத்ரம் பாக்யா சூக்தம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.

இப்படி செய்வதால் ஆதிசேஷனின் பரிபூரண அருளைப் பெறலாம். சர்வ மங்களம் உண்டாகும்.

 *ஆதிசேஷன்* *காயத்ரி* 

ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தந்நோ ஆதிசேஷ ப்ரசோதயாத்.

இதை 108 முறை சொல்ல வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம் சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

.
மேலும்