நவராத்திரி மூன்றாம் நாள்

By Tejas

நல்வரம் அருளும் அம்பிகையின் நவராத்திரி 3ம் நாள் வழிபாடு!

 

நவராத்திரியின் மூன்றாம் நாளாளில் அம்பாளை எப்படி அலங்கரிக்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், என்பதை பார்க்கலாம்...

 

அகில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம். 

 

இந்த ஒன்பது நாளும் அம்பாளை வழிப்படும் போது நெய்வேத்யம் செய்து வழிபடுவது வழக்கம். அதிலும் முதல் இரண்டு நாட்களில், பூஜையை தவற விட்டவர்கள், இந்த மூன்றாம் நாளில்கொலு வைத்து, தங்கள் விரதத்தை தொடங்கலாம். 

 

அந்தவகையில் நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பாளை எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம். 

 

நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்கு வயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்து போல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். 

 

மூன்றாவது நாளுக்கான வழிபாடு: 

மூன்றாவது நாளுக்கு உரிய தேவி - இந்திராணி 

குமாரியின் பெயர் - கல்யாணி 

மந்திரம் ஓம் கல்யாண்யை நம: 

சுவாசினியின் பெயர் - சந்த்ர காண்டா. 

மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம: 

நைவேத்தியம் - சர்க்கரைப் பொங்கல். 

 

இன்று நாம் வழிபடும் அம்பிகையான இந்திராணி கார்மேகம் போன்றவள்; ஒளிவீசும் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தன் தலையில் அணிந்த இவள் அழகிய வெள்ளை யானையின் மீது அமர்ந்திருப்பாள்; இனிய மணம் கமழும் மலர்களை தன் தலையில் சூடியிருக்கும் இவள் சப்தகன்னியரில் ஒருவள் ஆவாள்

 

நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று நைவேத்தியம் செய்து அம்பாளை வழிபடுவதால், உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்படும். மாணவர்கள், இந்தக் கோலத்தை தரிசிப்பது, மிகவும் நல்லது! 

 

*ஸ்ரீ இந்திராணி அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

 

*சௌஜன்யம்..!*

 

*அன்யோன்யம் .. !!* 

 

*ஆத்மார்த்தம்..!*

 

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

 

*அடியேன்*

*ஆதித்யா*

.
மேலும்