சிவனும், பெருமாளும் ஒன்று தான் என ஆன்மிகம் சொல்கிறது. சிவன் பெருமாளை வழிபட்டதாகவும், பெருமாள் சிவனை வழிபட்டதாகவும் பல தலங்களில் வரலாறு கூறுகிறது. பெருமாள் ராம அவதாரத்தில், மணலில் லிங்கம் செய்து வழிபட்டதும், அந்த இடம் தற்போதுள்ள ராமேஸ்வரம் தலம் என்றும் சொல்லப்படுகிறது.
ராம அவதாரத்தில் மட்டுமல்ல தான் எடுத்த 9 அவதாரங்களிலும் பெருமாள், பல வடிவங்களில் சிவ பெருமானை பல இடங்களில் சென்று வழிபட்டுள்ளதாக தல புராணங்கள் சொல்கின்றன. அப்படி பெருமாள் வழிபட்ட சிவ தலங்களை நமது சங்கத்தமிழ் சிவசக்தி குழு ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெருமாள் எடுத்த 9 அவதாரங்களில் வழிபட்ட ஆலயத்தின் ஈசனின் திருநாமங்கள் :
1. மச்சாவதாரம் - மச்சேஸ்வரர் 2. கூர்மாவதாரம் - கச்சபேஸ்வரர் 3. வராக அவதாரம் - பக்தவத்சலர் 4. நரசிம்ம அவதாரம் - காமீஸ்வரர் 5. வாமன அவதாரம் - வாமனபுரீசுவரர் 6. பரசுராம அவதாரம் - மகாலட்சுமீஸ்வரர் 7. ராமாவதாரம் - ராமலிங்கேஸ்வரர் 8. பலராம அவதாரம் - அமுதகடேசுவரர் 9. கிருஷ்ண அவதாரம் - விழிநாதேசுவரர்
பெருமாள், ராம அவதாரத்தில் மட்டுமின்றி தான் எடுத்த 9 அவதாரங்களிலும் சிவ பெருமானை வழிபட்டுள்ளார். இந்த சிவன் கோவில்கள் இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளன. பெருமாள் வழிபட்ட சிவன் கோவில்கள் பற்றி நமது சங்கத்தமிழ் சிவசக்தி குழு ஆன்மீக குழுவின் மூலம் மேலும் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
1. மச்சாவதாரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம்.
திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன், மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது.
அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கூர்மாவதாரம் :
ஆமை வடிவம் எடுத்த பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டி, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.