ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள்

By Senthil

ஸ்ரீராமர் அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான், சித்திரை மாதம் சுக்லபட்சம் அதாவது வளர்பிறை நவமி திதியில் பிறந்தார். அந்த நாளையே நாம் ராமநவமி ஆக கொண்டாடுகின்றோம்.

இந்த தினத்தில் அதிகாலையில் குளித்து வீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின் பழம், வெற்றிலை, பாக்கு, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.  வழிபாட்டின் போது நிவேதனமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயசம், வடை போன்றவற்றை படையுங்கள்.

ராம நவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். ராமரைப் பற்றிய நூல்களை படித்து  அவரது துதியை பாராயணம் செய்வதுமாக  இருப்பது நன்மையளிக்கும். ஸ்ரீராமஜெயம் என்னும் எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுத வேண்டும். ஸ்ரீராமா என்ற நாமத்தை மூன்று முதல் அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் இந்நாளில் நாமும் ராமனின் நாமம் சொல்லி அவனின் அருள்பெருவோம்

.
மேலும்