சனீஸ்வர பகவானுக்கு கறுப்புத் துணி ஏன்?

By News Room

யாராவது நமக்கு பிடிக்காத ஆசாமி வந்தால் நாம் என்ன முணு முணுக்கிறோம்???

வந்துட்டான்யா சனீஸ்வரன், பிடிச்சா விட மாட்டான்யா……என்றே

சொல்கிறோம்.தயவு செய்து என்னை அப்படி நினைக்க வேண்டாம,

இந்த சனி- கறுப்புத்துணி , விவகாரத்தை ஒரு கதை மூலமாக விளக்குகிறேன்………

பிரும்மாவின் புத்திரன் தட்சன். அவருடைய அருமை புத்திரி அதிதி.

அந்த அதிதியை காஸ்யபர் என்ற முனிவருக்கு மணமுடிக்கிறான் தட்சன்.

அந்த அதிதிக்கும் காஸ்யபருக்கும் பிறந்தவரே சூர்ய பகவான்!!!

அந்த சூர்ய பகவானுக்கு நான்கு மனைவிகள்….

முதல் மனைவி சஞ்சிகை

அவள் மூலமாக, பிறந்த குழந்தைகள்-யமன், யமி என்ற யமுனை, பத்திரை,

சாவர்ணிக மனு, அஸ்வினி தேவர்கள்,சுக்ரீவன்.

இரண்டாவது மனைவி சாயா தேவி என்ற நிழல்

அவள் மூலமாக பிறந்த குழந்தைகள் -கிருத வர்ஷா, நமது கதா நாயகன கிருத சர்மா

என்ற சனீஸ்வரன், தப்தி வைவஸ்வத மனு, காலன்

மூன்றாவது மனைவி – நீளா தேவி இவள் மூலமாக பிறந்த

குழந்தைதான் நமது தலை எழுத்தை படிக்கின்ற சித்திர குப்தன்!!!

நான்காவது மனைவி – குந்தி, இவளுக்கு பிறந்த குழந்தையே கர்ணன்

சூரியனுக்கும்,, சஞ்சிகைக்கும் முதல் மன்று குழந்தைகள் பிறந்வுடன்,

சூடு தாங்காத சஞ்சிகை, தன்னைப்போலவே, ஒரு நிழல் உருவத்தை

சிருஷ்டித்து, தயவு செய்து நீ சில நாட்கள் “ஆக்டிங்”மனைவியாய்

இரு. நான் தவம் செய்து திரும்பி வந்து “சார்ஜ் எடுத்துக்கொள்கிறேன்…….. என்றாள்.

நடிகை சாயா தேவியும் சூரியன் மூலமாக மூன்று குழந்தைகளைப்

பெற்றுக் கொளகிறாள்.என்ன காரணமாகவோ மூத்தாள் சஞ்சிகையின்

குழந்தைகளை கொடுமைப்படுத்தவே,

சூரியனுக்கு இந்த உண்மை தெரிந்து, சாயா தேவியை கண்டித்து சஞ்சிகையைத் தேடி

மீண்டும் சேர்த்துக் கொள்கிறான்.

சாயாவின் மகனுக்கு அதாவது கிருத வர்மாவிற்கு தீட்சண்யமான பார்வை,

அதாவது எதை பார்த்தாலும் அந்தப் பொருள் நாசம்!!!

இதனை உணர்ந்த சாயா தன்மகனை எங்கும் விடுவதில்லை…..

இதையும் மீறி விநாயகரின் பிறந்த நாளைக்கு கைலாயம் வந்து

வினாயகரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் தலை சிதற, சிவன் பைரவரைக் கொண்டு

வடக்கே தலை வைத்துப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை பொருத்தி விடுகிறார்.

அன்றிலிருந்து விநாயகர், கஜமுகனாகி விட்டார்!!!

கோபம் கொண்ட பார்வதி கைலையில் காலை வைத்த உன் கால் முடமாகட்டும் என

சபித்தாள்.இதற்கு மேலும் யமன் “மாற்றான் தாயின் மகனே” என்று தண்டத்தால் அடித்து

காலை மேலும் உடைக்கிறான் !!!

முடமாகிறான் கிருத வர்மா………

சூரியனின் மற்ற மகன்களும், மகள்களும், பிரசித்தமாக,

தான்மட்டும் இப்படி பயனில்லாமல் இருக்கிறோமே என்ற எண்ணம் கிருத வர்மாவை,

வாட்டி வதைத்தது……..

தாயின் ஆசீர்வாதத்துடன்

காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறான் கிருத வர்மா!!!

கடும் தவத்தினால் மகிழ்ந்த சிவன் நேரில் தோன்றி அவன்கடும் தவத்தை மெச்சி, “கிருத வர்மா,

இன்றையிலிருத்து நீ தேவ பதவி பெற்று நவ கிரகங்களில் ஒருவராகி “ஈஸ்வரப்பட்டமும்”

பெற்று ஒவ்வொருவருடைய ஆயுளுக்கும் அதிபதியாக, “சனீஸ்வரன்”

என்ற பெயருடன் விளங்குவாய்”!!!! உன்னுடய பிறந்த நாளான சனிக்கிழமை ஸ்திர வாரமாகட்டும்”

என்று ஆசீர்வதித்தார்.

அன்று முதல் கிருத வர்மாவாக இருந்தவர், சனீஸ்வரனாகி உலகத்தை ஆட்டுவிக்கிறார்.

XXXX

இதோ அவரைப்பற்றிய விவரங்கள்:-

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –

நீளா தேவி

இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய

வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி-

இவள் மகன் “தரித்திரன்” இவர் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும்

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு

தானியம் – எள் – கறுப்பு

உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு

வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி

புஷ்பம் – கருங் குவளை

இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்

உத்யோகம் – அடிமை

அதிதேவதை – யமன்

பிரத்யதி தேவதை- பிரஜாபதி

ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்

திசை – மேற்கு

பூதம் – காற்று

தன்மை – ஆண் அலி

மொழி – நீச பாஷை

உடல் அதிபதி -நரம்புக்கு

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்

சுவை – துவர்ப்பு

சமித்து – வன்னி

ரத்தினம் – நீலம்

சுபாபவம் – குரூரம்

குணம் – பாவி

நாடி – வாத நாடி

ஆசனம் – வில்

தேசம் – சௌராஷ்டிரம்

கண்டம்- ஆப்ரிக்கா

கோத்திரம் – காஸ்யபம்

ருது- வஸந்த ருது

காரகன்- ஆயுள் காரகன்

உச்சம் – துலா ராசியில்

நீசம் – மேஷ ராசியில்

சொந்த வீடுகள் – மகரம், கும்பம்

பார்வை – 3, 7, 10.

நண்பர்கள் – புதன், சுக்கிரன்

எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

சமமானவர் – குரு

ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி

தைலம் – நல்லெண்ணெய்

ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு

ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்

.
மேலும்