சரபேஸ்வரரை வழிப்பட்டால் கிடைக்கும் பலன்கள்?

By nandha

ஸ்ரீ சரபேஸ்வரர்துதியை   ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருச்சிற்றம்பலம்

சரபேஸ்வரர் ஸ்லோகம் ..... ஹராய பீமாய ஹரிப்ரியாய பவாய சாந்தாய பராத்பராய ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய நமோஸ்து துப்யம் சரபேச்வராய ஸ்ரீ சரபாஷ்டகம்

- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

பகைமையை அழிப்பதே சரப மந்திரத்தின் மிகப்பெரிய சக்தியாகும். மனிதர்களின் அகப்பகையாகிய காமம், குரோதம் முதலானவற்றை அழித்து மனிதனை செம்மைப்படுத்துவதே சரப மந்திரத்தின் நோக்கமாகும்.

ஸ்ரீ சரபேஸ்வரர் துதி ஓம் ஸாலுவேசாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹே தந்நோ சரபேஸ்வர ப்ரசோதயாத் அஸ்ட பாதாய வித்மஹே பட்ஷி ராஜாய தீமஹே தந்நோ சரபப் ப்ரசோதயாத்

சரபேஸ்வரர் என்பவர் யார்?

சரபேஸ்வரரை வழிப்பட்டல் கிடைக்கும் பலன்கள்...

சரபேஸ்வரர் 108 போற்றிகள்... ஓம் விண்ணவா போற்றி ஓம் விளங்கு உயர் வீரா போற்றி ஓம் திண்ணவா போற்றி ஓம் அணிமாமலர் பறவை போற்றி ஓம் அரசே போற்றி ஓம் ருத்ர அக்னியே போற்றி ஓம் மந்திரத் துதி தேவா போற்றி ஓம் மாமலர் நாகலிங்க சக்தியே போற்றி ஓம் சர்வ வியாபியே போற்றி ஓம் சங்கரா போற்றி ஓம் காலகாலனை நடுங்கச் செய்தவனே போற்றி ஓம் காலமெல்லாம் கருத்தில் நிறைந்தவனே போற்றி ஓம் பிறவி பயம் அறுத்தவனே போற்றி ஓம் நிரந்தரமானவனே போற்றி ஓம் நியாயத் தீர்ப்புவழங்குபவனே போற்றி ஓம் வீரபத்திரனே போற்றி ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி ஓம் மகாதேவா போற்றி ஓம் நரசிம்மரை அடக்கிய அழகா போற்றி ஓம் நான்மறை ஆனாய் போற்றி ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி ஓம் மந்திர தந்திரங்களை ஆள்பவனே போற்றி ஓம் கம்பத்தில் சிகண்டி சித்தரால் நிற்பவனே போற்றி ஓம் கோபக் கனலாய் விடுபவனே போற்றி ஓம் கூரிய நகங்களைக் கொண்டவனே போற்றி ஓம் லிங்க பதியே போற்றி ஓம் இருபத்தியோரு முக ருத்திராட்சம் அணிந்தவனே போற்றி ஓம் சத்திய துணையே போற்றி ஓம் சாந்தி அருள்பவனே போற்றி ஓம் சத்திய சாட்சியே போற்றி ஓம் சத்திய உருவே போற்றி ஓம் ஆக்கல், காத்தல், அழித்தல் தலைவா போற்றி ஓம் புவனம் பல்லாயிரம் கோடியும் படைத்தாய் போற்றி ஓம் அனைத்தையும் ஆட்டிப் படைப்பாய் போற்றி ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி ஓம் அம்ருத அரசே போற்றி ஓம் சித்தர்கள் சிந்தையில் புகுந்தவனே போற்றி ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி ஓம் சிந்தாமணியின் ஜீவ சிவனே போற்றி ஓம் சித்தாந்த பக்திசித்தனே போற்றி ஓம் பரமாத்மனே போற்றி ஓம் பரப்பிரம்மனே போற்றி ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி ஓம் கைலாசவாசா போற்றி ஓம் திருபுவனேசா போற்றி ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி ஓம் நம்பினோர்க்கு நலம் அருள்வாய் போற்றி ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி ஓம் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி ஓம் எதிரிகள் கொடுமை தீர்ப்பாய் போற்றி ஓம் எண்ணியவாறு எமக்கருள்வாய் போற்றி ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி ஓம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி ஓம் வழித்துணையாய் வருவாய் போற்றி ஓம் வலம் சுழித்து எட்டு திசையும் காப்பாய் போற்றி ஓம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி ஓம் நமசிவாய திருவே போற்றி ஓம் சிவ சூரியா போற்றி ஓம் சிவச் சுடரே போற்றி ஓம் அட்சர காரணனே போற்றி ஓம் ஆதி சிவனே போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் திகம்பரா போற்றி ஓம் ஆனந்தா போற்றி ஓம் கால காலனே போற்றி ஓம் காற்றெனக் கடுகி உதவும் தேவா போற்றி ஓம் கர்ப்பப் பையைக் காப்பவனே போற்றி ஓம் காத்து கருப்புகளை அழிப்பவனே போற்றி ஓம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனே போற்றி ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி ஓம் வல்லார்கள் நால்வரும் தோத்தரித்த தேவா போற்றி ஓம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி ஓம் முக்திக்கு வித்தாகும் மூல குருவே போற்றி ஓம் தெவிட்டாத சின்மயச் சுடரே போற்றி ஓம் விரும்பி நல்விளக்கு தீபத்தில் வருபவனே போற்றி ஓம் அமரர் படையுடைத் தலைவா போற்றி ஓம் நீலக் கையில் மான் தூக்கி நின்றோனே போற்றி ஓம் சிவந்த மழுவும் தூக்கிச் சிறந்தோனே போற்றி ஓம் எங்கிருந்து அழைத்தாலும் வருவோனே போற்றி ஓம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி ஓம் ப்ரத்யங்கிரா தேவியின் பரப்ரும்மமே போற்றி ஓம் செம்பொன் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி ஓம் நகமே ஆயுதமாய்க் கொண்ட நமசிவாயமே போற்றி ஓம் பெருமாளுக்கும் நான்முகனுக்கும் நலம் தரும் தெய்வமே போற்றி ஓம்

.
மேலும்