நம் உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி ரகசியம்?

By Tejas

நம் பாதங்களில் வசிப்பவள் ஆதிலஷ்மி. நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள். நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் கஜலஷ்மி.

காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும் நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு கஜலட்சுமி விலகுகிறாள்..!! நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் வீர்யலஷ்மி..!! வசிக்கிறாள்.

பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த வீர்யலஷ்மி விலகுகிறாள். நம் இடது தொடையில் வசிப்பவள் விஜயலஷ்மி.

இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம். எனவே மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலக்ஷ்மி விலகி விடுவாள்.!! வலது தொடையில் வசிப்பவள் சந்தானலஷ்மி...!

பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும். இடது தொடையிலோ .. இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த சந்தானலஷ்மி விலகி விடுவாள்...!! நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் தான்யலஷ்மி...!

எச்சில் உணவு... ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக் களுக்கோ .. பிறருக்கோ கொடுத்தால் தான்ய லட்சுமி விலகி விடுவாள். நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் தைரியலஷ்மி..!!

நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கொடுப்பவர்களை விட்டு தைரிய லட்சுமி விலகுகிறாள். நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் வித்யாலஷ்மி...!!

கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும் .. பூணூல்... தாலி... என குடும்ப பராம்பரிய சின்னத்தை அணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுகிறாள். நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் செளபாக்யலஷ்மி.!!

இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும் , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி . நாமம் .. அணியாவிட்டாலும் நம்மை விட்டு சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள்

பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்?

இந்த தகவல்கள் அனைத்தும் மகா மந்திர போதிணி என்ற அபூர்வ நூலில் உள்ளது.

.
மேலும்