சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சிவனை நினைத்தாலே பல்வேறு பலன்களைத் தரக்கூடியவர். சிவ நாமமும், சிவ பூஜையும் நம்மை நல்வழிப்படுத்துவதோடு, முக்தியை தர வல்லவர்.
1. ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம். 2. புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட முக்தியைப் பெறலாம். 3. பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் சேரும். 4. சந்தன லிங்கம் செய்து வழிபட அனைத்து இன்பங்களும் வந்து சேரும். 5. திருநீறு லிங்கம் (விபூதி லிங்கம்) வைத்து வழிபட எல்லா வித செல்வங்களும் குவியும். 6. மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ் நாள் கிடைக்கும். 7. அரிசி மாவால் சிவ லிங்கம் செய்து வழிபட உடல் வலிமை பெறும். 8. சோறு லிங்கம் (அன்னம் லிங்கம்) செய்து வழிபட உணவுப் பற்றாக்குறை நீங்கும். 9. பழங்களால் லிங்கம் செய்து வழிபட சிறப்பான இன்பமான வாழ்வு அமையும். 10. தயிர் லிங்கம் நற்குணத்தைத் தருவார். 11. தண்ணீர் லிங்கம் - அனைத்தையும் மேன்மையாக்குவார். 12. கூர்ச்சம் எனப்படும் முடிச்சிட்ட நாணல் லிங்கத்தை வழிபட முக்தி கிடைக்கும். 13. சர்க்கரை, வெல்லம் லிங்கம் செய்து வழிபட விரும்பிய வாழ்க்கையும், இன்பமும் கிடைக்கும். 14. பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட நோயற்ற வாழ்வு கிடைக்கும். 15. பசு வெண்ணெய்யை லிங்கம் செய்து வழிபட மன மகிழ்ச்சி ஏற்படும். 16. ருத்திராட்ச லிங்கத்தை வைத்து வழிபட நல்லறிவு கிடைக்கும். இப்படி பல்வேறு சிவ லிங்கத்தை வழிபட்டு அனைத்து வித நல்வினைகளைப் பெற்றிடுங்கள்.