'திருமுக்கூடல்' - வெங்கடேச பெருமாள் கோயில்

By nandha

சென்னைக்கு மிக அருகில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயங்கிய மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும்.

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்துக்கு சில கிமீ முன்பு அமைந்துள்ளது இக்கோயில் அமைந்துள்ள 'திருமுக்கூடல்' கிராமம்.

பாலாறு, வேகவதி ஆறு, செய்யாறு என மூன்று ஆறுகள் இங்கு சங்கமிப்பதால் முக்கூடல் எனும் பெயர்பெற்றது இவ்வூர்.

இந்த திருவெங்கடேச பெருமாள் கோயில் கி.பி 854க்கும் கி.பி 860க்கும் இடைப்பட்ட காலத்தில் விசய நிருபதுங்க விக்கிரமன் எனும் பல்லவ மன்னனால் கட்டப்பட்டது.

பல்லவ சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள், ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் அழகுக்கே அழகு சேர்க்கின்றன.

கிபி 1060 களில் ஆட்சி புரிந்த இராஜேந்திர சோழன் இக்கோயிலை வெறும் ஆன்மீகத்தோடு முடக்கிவிடாமல், இக்கோயிலை கல்வி, பண்பாடு மற்றும் சுகாதார மையமாக்கி இருக்கிறார்.

இக்கோயிலில் அமைந்துள்ள 55 வரிகள் கொண்ட கல்வெட்டின் மூலம் சோழமன்னரின் ஆட்சிக் காலத்தில் கோயில் வளாகத்துக்குள்ளேயே ஆயுர்வேதமருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி, வேத பாடசாலையோடு 15 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையும் இயங்கி வந்துள்ளதை அறிய முடிகிறது.

இதனொடு சிறப்பு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 20 வகை மருந்துகள் நோயாளிகளுக்கு தரப்பட்ட தகவலும் இக்கல்வெட்டில் உள்ளது.

இதற்கென கோயிலைச் சுற்றி மூலிகைப் பண்ணை அமைத்திருக்கிறார் ராஜேந்திர சோழர். இப்போதும் இந்தமூலிகைத் தோட்டம் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப் பட்டு வருகிறது.

- மனோமகன்

.
மேலும்