நடக்காததை நடத்திக் காட்டும் ஸ்ரீநரசிம்ம மந்திரம்

By Tejas

வாழ்க்கையில் எல்லோருமே நினைப்பது நடக்க வேண்டும், எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், நாம் நினைப்பதெலலம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பதற்கேற்ப சோதனைகள் வருவதுண்டு. நினைப்பதும் நடப்பதில்லை.

 

மாறாக எதிர்பாராத ஒன்று தான் நடக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் நினைப்பதையும், நடக்காது என்று நினைத்தவற்றை நடத்திக் காட்டவும் நரம்மரின் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்...நடக்காதது, நினைக்காதது என்று அனைத்தும் நமக்கு நல்லபடியாக நடந்து முடியும்.

 

ஸ்ரீநரசிம்ம மந்திரம்

 

*யஸ்ப அபவத்* *பக்தஜன* *ஆர்த்திஹந்து*

*பித்ருத்வம்* *அந்யேஷு* *அவிசார்ய தூர்ணம்*

*ஸ்தம்பே அவதார* *தம் அநந்ய லப்யம்*

*லக்ஷ்மி* *ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே*

 

இந்த லோகத்தை சொல்ல முடியாதவர்கள் மந்திரத்திற்குரிய பொருளை சொல்ல வேண்டும்.

 

பக்தி அற்றவர்களால் உன்னை அடைய முடியாதவனே! தாயின் கருவறையில் அவதரித்தால் தாமதமாகும் என்று தூணில் அவதரித்தவனே! நினைத்த நேரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரம்மனே உனது திருவடியைச் சரணடைகிறேன். 

 

இதனை சொல்லி வந்தால், நமது வாழ்வில் நடக்காது என்று நினைத்த காரியம் கூட எளிதில் நடந்து முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம்

.
மேலும்