ஸ்ரீ நீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர், வாழைவனநாதர் திருக்கோவில், திருச்சி

By News Room

அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி உடனுறை ஸ்ரீ நீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்,

வாழைவனநாதர் திருக்கோவில்.

 

மூர்த்தி : எமன்.

 

தலவிருட்ஷம் : ஞீலி மரம் ( கல் வாழை ).

 

வழிபட்டோர் : தர்மராசன், பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி. 

 

பாடியோர் : சம்பந்தர், சுந்தரர், அப்பர்.

 

இந்தக் கோயிலுக்கு உள்ளேயும் கோயிலுக்கு வெளிப்பகுதியிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், யம தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் என்று ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இங்கு இருக்கும் இறைவனை தரிசிக்க நாம் படிக்கட்டுகளில் இருந்து கீழே இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும்.

 

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் ஒரு வகைக்  கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.  ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது  சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது சிறப்பாகும்..

 

குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள  ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.  அதனால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.  எமபயம்  நீங்க பிரத்தியேகமாக "எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை  செய்தால் எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

திருச்சி.

 

திருப்பைஞ்ஞீலி - 

 

மண்ணச்சநல்லூர் வட்டம், 

 

திருச்சி மாவட்டம்.

.
மேலும்