ஸ்ரீ சிவ சூரிய நாராயண திருக்கோவில்

By Tejas

 

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

 

அருள்மிகு ஸ்ரீ  சிவ சூரிய நாராயண

திருக்கோவில், திருவிடைமருதூர் வட்டம்.

தஞ்சாவூர்

 

இந்த கோவில் குலோத்துங்கச்

சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்றும், (கி.பி 1060 தொடக்கம் 1118 வரையிலாக காலப்பகுதி)

 

கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியருடன் காட்சி தருகிறார்.

 

தீர்த்தம் : 

சூரிய தீர்த்தம்  

 

இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

 

ஏனைய எட்டு நவக்கிரக தலங்களும் சூரியனார் கோவிலுக்கு அண்மையிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை 

திருநள்ளாறு (சனி ), கஞ்சனூர் (சுக்கிரன் ), ஆலங்குடி (குரு ), திருவெண்காடு ( புதன் ), வைத்தீஸ்வரன் கோவில் ( செவ்வாய் ),

திருநாகேஸ்வரம் ( ராகு ), கீழ்பெரும்பள்ளம் ( கேது ), மற்றும் திங்களூர் ( சந்திரன் ).

ஆடுதுறை.

.
மேலும்