சூரியனார் திருக்கோவில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர்

By saravanan

மூலவர் : சிவசூர்யன்

தாயார் : உஷாதேவி, சாயாதேவி

தல விருட்சம் : வெள்ளெருக்கு

தீர்த்தம் : சூரியதீர்த்தம்

 

கருவறையில் சூர்ய பகவான் நின்றபடி திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

நவகிரக தலங்களில் முதன்மையானதாக கருதப்படுவது அருள்மிகு சூரியனார் திருக்கோவில். தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள இத்தலத்தின் மூலர் சிவசூர்யன் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலம் சூரிய பரிகார தலமாக விளங்குவதால் அவரது பெயரால் சூரியனார் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

 

சூரிய பகவான் :

 

உலக இயக்கத்திற்கு காரணமான சூரியனை வழிபடும் முறைக்கு செளமாரம் என்று பெயர். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் தனது பயணத்தை துவக்குவதையே தமிழ் மாத பிறப்பு என்கிறோம். சூரியனை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரதசப்தமி. இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கிறோம்.

 

நவகிரகங்களில் முதன்மையான சூரியனின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்தவர் தான் சனீஸ்வரன் என்றும், இரண்டாவது மனைவியான சந்தியாவிற்கு பிறந்தவர்கள் தான் யமனும், யமுனையும் (நதி) என சொல்லப்படுகிறது. ஒரு மனிதனின் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவர் சூரிய பகவான் தான். அரசியல் வாழ்க்கை, அரசு வேலை, தலைமைப்பதவி, தந்தை வழி யோகம் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரியன் தான். சூரியனுக்கு உரிய நிறம் சிவப்பு. தானியம் கோதுமை ஆகும்.

 

சூரிய காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாஸ அஸ்தாய தீமஹி

தன்னோ சூரிய ப்ரசோதயாத்

சூரிய பரிகார தலங்கள்

 

சூரியனார் கோவில் மட்டுமின்றி சென்னை கொளபாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஒடிசா மாநிலம் கோனார்க் சூரியன் கோவில், குஜராத் மார்தாண்ட சூரியன் கோவில், ஆந்திரா ஸ்ரீகாகுளம் அரசவல்லி சூரியன் கோவில், காஷ்மீர் சூரியன் கோவில், திருவாரூர் திருமீச்சூர் லலிதாம்பிகை கோவில், திருப்பூர் மடத்துக்குளம் அர்ச்சுனேஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் ஆகியனவும் சூரிய பரிகார தலங்களாக உள்ளன.

 

கோவில் தனிச்சிறப்புக்கள்

 

* இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் காட்சி தருகிறார்

 

* உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருகிறார்

 

* இங்குள்ள நவகிரகங்கள் வாகனம் இன்றி காட்சி அளிக்கின்றன.

 

கோவில் பற்றிய விபரம் :

 

மூலவர் : சிவசூர்யன்

 

தாயார் : உஷாதேவி, சாயாதேவி

 

தல விருட்சம் : வெள்ளெருக்கு

 

தீர்த்தம் : சூரியதீர்த்தம்

 

தனித்தனி சன்னதியில் நவகிரகங்கள்

தல வரலாறு :

 

கொடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்ட காலவ முனிவர், தனது நோய் குணமடைய வேண்டி நவகிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவகிரகங்களும் காலவ முனிவரின் தவத்திற்கு மகிழ்ச்சி, அவரது நோய் தீர வரம் அளித்தனர். இதனால் கோபமடைந்த படைக்கும் கடவுளான பிரம்மா, " கால சுழற்றிசியின் அடிப்படையில் ஒவ்வொருவரின் நன்மை, தீமைகளை வழங்கும் அதிகாரம் மட்டுமே உங்களுக்கு உண்டு. வரம் தரும் அதிகாரம் நவகிரகங்களுக்கு கிடையாது. நீங்கள் வரம் தரும் அளவுக்கு சென்றுவிட்டதால் நீங்கள் பூலோகத்தில் தொழுநோயால் கஷ்டப்படுவீர்கள்" என சாபமிட்டார்.

 

அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அருள் செய்து, அவர்களின் தோஷங்களை போக்க வேண்டும் என வரம் தந்தார்.

 

தல பெருமை

 

நவகிரக தலங்களிலேயே அனைத்து நவகிரகங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ள ஒரே கோவில் இது மட்டும் தான். அதே போன்று நவகிரக தலங்களில் சிவனின் பெயரில் அல்லாது, சூரியனின் பெயராலேயே அழைக்கப்படும் ஒரே கோவில் இது மட்டும் தான். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரகளை இங்கு மட்டுமே காண முடியும். திராவிட கட்டிடக் கலை முறையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு என்றும், பிறகு ஆட்சிக்கு வந்த விஜயநகர மன்னர்கள் இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

சிவ பூஜை செய்யம் குரு பகவான்

கோவில் அமைப்பு :

 

ஐந்து நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் கருவறையில் தனது இரண்டு மனைவிகளுடன் சூரிய பகவான் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியனார் சன்னதியில் இருந்து நேராக சென்றால் விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர், சிவகாமி, விநாயகர், முருகன் ஆகியோர்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.

 

புதன், சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய எட்டு கிரகங்களின் சன்னதிகளும் சூரியனாரின் சன்னதியை பார்ப்பது போது அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவால் சிவ பூஜை செய்யும் நிலையில் நமக்கு காட்சி தருகிறார். இக்கோவிலில் மற்றொரு முக்கியமான சன்னதியாக கருதப்படுவது கோள் வினை தீர்த்த விநாயகர் சன்னதி. நவ கிரகங்களால் ஏற்படும் கெடு பலன்களை தீர்த்து, நன்மைகளை வழங்கக் கூடியவராக இவர் பார்க்கப்படுகிறார்.

 

பிரார்த்தனை :

 

பக்தர்கள் தங்களின் தோஷங்கள் விலக வஸ்திரம், தானியங்கள், நகைகள், மலர்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். விளக்கேற்றி வழிபடுவது பொதுவான பிரார்த்தனையாக உள்ளது.

விழாக்கள் :

 

சோமவார, சுக்கிர வார பூஜைகள், பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி, சதுர்த்தி ஆகிய நாட்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் ரதசப்தமி 10 நாட்கள் விழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

கோவில் திறந்திருக்கும் நேரம் :

 

காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

முகவரி :

 

அருள்மிகு சூரியனார் கோவில்,

 

திருமங்கலக்குடி, திருவிடைமருதூர்,

 

தஞ்சாவூர் மாவட்டம் - 612102

 

தொலைப்பேசி : +91-0435 247 2349

 

சூர்ய அஷ்டகம் தமிழில் வரிகள்

Surya Ashtakam

 

ஆதிதேவம் நமஸ்துப்யம் ப்ரசீத மம பாஸ்கர

திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே (1)

 

சப்தாஸ்வரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மாஜம்

ஸ்வேத பத்மதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (2)

 

லோஹிதம் ரதமாரூடம் சர்வலோகபிதாமஹம்

மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (3)

 

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரம்மாவிஷ்ணு மஹேச்வரம்

மஹாபாபஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (4)

 

ப்ரம்மிதம் தேஜ: புஞ்சம் ச வாயுமாகாசமேவ ச

ப்ரபும் ச சர்வலோகானாம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (5)

 

பந்தூகபுஷ்ப சங்காசம் ஹார குண்டல பூஷிதம்

ஏக சக்ரதரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (6)

 

தம் சூர்யம் ஜகத் கர்தாரம் மஹா தேஜ: ப்ரதீபனம்

மஹாபாப ஹரம் தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (7)

 

 தம் சூர்யம் ஜகதாம் நாதம் ஞான விஞான மோக்ஷதம்

 மஹாபாப ஹரம்தேவம் தம் சூர்யம் ப்ரணமாம்யஹம் (8)

 

சூரிய பகவானுக்கு உகந்த 108 போற்றி

 

1.ஓம் அதிதி புத்ரனே போற்றி

2.ஓம் அளத்தற்கரியனே போற்றி

3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி

 

 4.ஓம் அருணன் சோதரனே போற்றி

5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி

7.ஓம் ஆண் கிரகமே போற்றி

8.ஓம் ஆதிவார நாதனே போற்றி

9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி

10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி

11.ஓம் ஆன்மாவே போற்றி

12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி

13.ஓம் இருள் நீக்கியே போற்றி

14.ஓம் இயக்க சக்தியே போற்றி

15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி

16.ஓம் உக்கிரனே போற்றி

17.ஓம் உஷா நாதனே போற்றி

18.ஓம் உவமைப் பொருளே போற்றி

19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி

20.ஒம் உத்திரநாதனே போற்றி

21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி

22.ஓம் என்பானவனே போற்றி

23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி

24.ஓம் எழுபரித் தேரனே போற்றி

25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி

26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி

27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி

28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

29.ஓம் ஓராழித்தேரனே போற்றி

30.ஓம் ஓய்விலானே போற்றி

31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி

32.ஓம் கதிரவனே போற்றி

33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

34.ஓம் களங்கமிலானே போற்றி

35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி

36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி

37.ஓம் கனலே போற்றி

38.ஓம் கண்ணின் காவலே போற்றி

39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி

40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி

41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி

42.ஓம் காயத்ரி தேவனே போற்றி

43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி

44.ஓம் காலக் கணக்கே போற்றி

45.ஓம் காய்பவனே போற்றி

46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி

47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி

48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி

49.ஓம் கிரக நாயகனே போற்றி

50.ஓம் கிருபாகரனே போற்றி

51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி

52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி

53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி

54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி

55.ஓம் ஞாயிறே போற்றி

56.ஓம் ஞாலக் காவலே போற்றி

57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி

58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி

59.ஓம் சாட்சித் தேவனே போற்றி

60.ஓம் சமரிலானே போற்றி

61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி

62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி

63.ஓம் சிரஞ்சீவியே போற்றி

64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி

65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி

66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி

67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி

68.ஓம் செம்மேனியனே போற்றி

69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி

70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி

71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி

72.ஓம் சூலாயுதனே போற்றி

73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி

74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி

75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி

76.ஓம் தாமிர உலோகனே போற்றி

77.ஓம் தூயவனே போற்றி

78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி

79.ஓம் நடுவிருப்போனே போற்றி

80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி

81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி

82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி

83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி

84.ஓம் நாடப்படுபவனே போற்றி

85.ஓம் நீதிதேவனே போற்றி

86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி

87.ஓம் பகற்காரணனே போற்றி

88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி

89.ஓம் பரஞ்சோதியே போற்றி

90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி

91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி

92.ஓம் பிரபாகரனே போற்றி

93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி

94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி

95.ஓம் மல நாசகனே போற்றி

96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி

97.ஓம் மயில்வாகனனே போற்றி

98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி

99.ஓம் முதல் கிரகமே போற்றி

100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி

101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி

102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி

103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி

104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி

105.ஓம் விடியச் செய்பவனே போற்றி

106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி

107.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி

108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!

ஸ்ரீ சிவசூர்யநாராயணஸ்வாமியே நின் திருவடிகள் துணை

.
மேலும்