சொர்ண ஆக்ஷன பைரவர் கோவில். அழிவிடைதாங்கி, பைரவபுரம். காஞ்சிபுரம்.

By nandha

உலகிலேயே முதல் சொர்ண  ஆக்ஷன பைரவர் இவர்தான்.  இங்கு பைரவருக்கு மட்டும் நந்தி முன்னே இருக்கும். ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவர் இவர்.

முதலில் பைரவரின் வாகனமான நாய் உள்ளே சென்றவுடன் தான் பக்தர்கள் அனுமதிக்கபடுவர். ஒரு பெரும் அழிவில் இருந்து காப்பாற்றியாதால் இத்திருத்தல பைரவருக்கு அழிவிடைதாங்கி பைரவர் என பெயர் வந்நது.

தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது.  பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு #கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது.

வட இந்திய மாணவர்கள் இங்கு கல்வி_பயின்றனர். ஹிமசீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பெளத்தர்களை வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார் பின்னர் இங்கு சமண கல்வி கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் அறவழித்தாங்கி என அழைக்கப்பட்டது. பொற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் {கி.பி.14ஆம் நூற்றாண்டில்} வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான் இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் நாசமடைவதைக்கண்டு வருந்தினர்.

அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்பட வேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துணையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான் அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி என பெயரிட்டார்.

இந்த வெற்றியை அருளிய ஸ்ரீசொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோயிலையும் எழுப்பினார். இக்கோயிலின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தலபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே.

சிறப்பம்சங்கள்

இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும்.

காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி ஊருக்கு  வந்தடையலாம்..

.
மேலும்