திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சி 2023 எப்போது? குழப்பத்தில் பக்தர்கள்

By News Room

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்

 

திருநள்ளாறு கோயிலின் முடிவு  டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி திருவிழா நடைபெறவுள்ளது

 

 Sani Peyarchi 2023: இந்தாண்டு சனிப்பெயர்ச்சி எப்போது என பக்தர்களிடையே எழுந்த குழப்பத்திற்கு, திருநள்ளாறு சனிபகவான் கோயில் நிர்வாகம் முடிவு கொண்டுவரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இந்தாண்டு சனிப்பெயர்ச்சி எப்போது என பக்தர்களிடையே எழுந்த குழப்பத்திற்கு, திருநள்ளாறு சனிபகவான் கோயில் நிர்வாகம் முடிவு கொண்டுவரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 இந்தாண்டு சனிப்பெயர்ச்சி எப்போது என பக்தர்களிடையே எழுந்த குழப்பத்திற்கு, திருநள்ளாறு சனிபகவான் கோயில் நிர்வாகம் முடிவு கொண்டுவரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் சனீஸ்வரன் சன்னதி அமைந்திருப்பதால், டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி திருவிழா நடைபெறவுள்ளது.

 

அந்த கோயில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை அருகில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சனிபகவானுக்குரிய_பரிகாரங்களும் நல்லது நடக்க செய்து வளம் பெறுங்கள்

 

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

 

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

 

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

 

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

 

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

 

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

 

* ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

 

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

 

* தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

 

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

 

* கோமாதா பூஜை செய்யலாம்.

 

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

 

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

 

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

 

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

 

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

 

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

 

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

 

* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

 

* சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

ஸ்ரீ சனீஸ்வரபகவான் 108 போற்றி இன்று 2/12/23 சனிக்கிழமை பதிவு செய்துள்ளோம்.

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சனீஸ்வரபகவான் 108  போற்றி

 

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி

ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி

ஓம் அலிக்கிரகமே போற்றி

ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி

ஓம் அனுஷத்ததிபதியே போற்றி

ஓம் அன்னதானப் பிரியனே போற்றி

ஓம் அசுப கிரகமே போற்றி

ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

ஓம் ஆயுட்காரகனே போற்றி

ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

 

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் இளைத்த தேகனே போற்றி

ஓம் இரும்புத் தேரனே போற்றி

ஓம் இரும்பு உலோகனே போற்றி

ஓம் ஈடிலானே போற்றி

ஓம் ஈசுவரனானவனே போற்றி

ஓம் உக்கிரனே போற்றி

ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி

ஓம் உபகிரகமுளானே போற்றி

 

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி

ஓம் எள் விரும்பியே போற்றி

ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் ஏழாம் கிரகனே போற்றி

ஓம் கரு மெய்யனே போற்றி

ஓம் கலி புருஷனே போற்றி

ஓம் கழுகு வாகனனே போற்றி

ஓம் கருங்குவளை மலரனே போற்றி

ஓம் கரிய ஆடையனே போற்றி

 

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி

ஓம் கருங்கொடியனே போற்றி

ஓம் கருநிறக் குடையனே போற்றி

ஓம் கண்ணொன்றிலானே போற்றி

ஓம் காகமேறியவனே போற்றி

ஓம் காசியில் பூசித்தவனே போற்றி

ஓம் காரியே போற்றி

ஓம் காற்றுக் கிரகமே போற்றி

ஓம் குளிர்க் கோளே போற்றி

ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

 

ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி

ஓம் குளிகன் தந்தையே போற்றி

ஓம் குறுவடிவனே போற்றி

ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி

ஓம் கைப்புச்சுவையனே போற்றி

ஓம் சடையனே போற்றி

ஓம் சமரிலானே போற்றி

ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி

ஓம் சனிவார நாயகனே போற்றி

ஓம் சாயை புத்ரனே போற்றி

 

ஓம் சுடரோன் சேயே போற்றி

ஓம் சூரனே போற்றி

ஓம் சூலாயுதனே போற்றி

ஓம் சூர்ய சத்ருவே போற்றி

ஓம் சுக்ர நண்பனே போற்றி

ஓம் சிவனடியானே போற்றி

ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி

ஓம் சீற்றனே போற்றி

ஓம் செயலறச் செய்பவனே போற்றி

ஓம் தமோகணனே போற்றி

 

ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி

ஓம் தனிக்கோயிலுளானே போற்றி

ஓம் தீபப் பிரியனே போற்றி

ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி

ஓம் துலாராசியிலுச்சனே போற்றி

ஓம் துயரளித்தருள்வோனே போற்றி

ஓம் தைரியனே போற்றி

ஓம் தொலை கிரகமே போற்றி

ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

 

ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி

ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி

ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி

ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி

ஓம் பயங்கரனே போற்றி

ஓம் பக்கச் சுழலோனே போற்றி

ஓம் பத்மபீடனே போற்றி

ஓம் பத்திரை சோதரனே போற்றி

ஓம் பிணிமுகனே போற்றி

ஓம் பிரபலனே போற்றி

 

ஓம் பீடிப்பவனே போற்றி

ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி

ஓம் புஷ்பப்பிரியனே போற்றி

ஓம் புதன்மித்ரனே போற்றி

ஓம் பூசத் ததிபதியே போற்றி

ஓம் பேதமிலானே போற்றி

ஓம் பைய நடப்பவனே போற்றி

ஓம் போற்றப்படுபவனே போற்றி

ஓம் மகரத்தாள்பவனே போற்றி

ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

 

ஓம் மதிப்பகையே போற்றி

ஓம் மநு சோதரனே போற்றி

ஓம் முடவனே போற்றி

ஓம் முதுமுகனே போற்றி

ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி

ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி

ஓம் மேல் திசையனே போற்றி

ஓம் மேற்கு நோக்கனே போற்றி

ஓம் யமுனை சோதரனே போற்றி

ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

 

ஓம் வன்னி சமித்தனே போற்றி

ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி

ஓம் வக்கரிப்பவனே போற்றி

ஓம் வளை மூன்றுளானே போற்றி

ஓம் வில்லேந்தியவனே போற்றி

ஓம் வில்வப்பிரியனே போற்றி

ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் சனீச்வரனே போற்றி

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்

.
மேலும்