குருவின் திருவருள் பெற...

By News Room

குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார் கள். குரு பகவானின் அருள் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மிக முக்கியமானது, குரு பலன் இருந்தால் பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும் எனவும், குருவின் அருள் இருந்தால் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையும் நீலவி வருகிறது.

குரு பகவானின் அருள் இருந்தால் தம்பதி களு க்கு ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை யும் உள்ளது.

குரு என்றும் நலம்மட்டுமே அருள்பவர். அவரால் தீய பலன்கள் எதுவும் ஏற்படாது. நற்பலன்கள் குறையலாமே தவிர நிச்ச யமாக தீய பலன்கள் ஏற்படாது.

குருபகவானுக்கென்று தமிழகத்தில் தனி ஸ்தலமே உள்ளது. தமிழ்நாட்டில் மயிலாடு துறைக்கு அருகே இருக்கும் ஆலங்குடி என்ற இடத்தில் குரு ஸ்தலம்இருக்கிறது. இங்கு சென்று குரு பகவானை வழிபடுவது சிறப்பு தரும்.

சிவ பெருமானின் தட்சிணாமூர்த்தி கோல மும், குரு என்றுதான் அழைக்கப்படுகிறது. தகப்பனுக்கே உபதேசம் செய்த முருகன், குரு ஷேத்திரமானதிருச்செந்தூருக்கு அதிபதி.

திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கு ம் முருகப்பெருமான் ஸ்தலமும் குரு ஸ்த லமாக கருதப்படுகிறது. இங்கு சூரசம்ஹா ரத்திற்கா ன ஆலோசனையில் முருகன் ஈடுபட்டிருந்த போது அங்கு குருபகவான் வந்தார்.

அப்போது அசுரர்கள் அனைவரைப் பற்றி யும், அவர்களது பலம்,பலவீனம் பற்றியும் குரு பகவானிடம் முருகப்பெருமான் கேட்டறிந்ததா கவும்கூறப்படுகிறது.

அதன் பின் குருபகவான் முருகனை வழிப ட்டு அருள் பெற்றார். சூரனை, அசுரனை தீமையை முருகன் அழித்த தலம் திருச்   செந்தூர் இங்கு குருவுக்கும் அருள்பாலி த்தவர் முருகன். குருவு க்கு அருள்பாலித்த முருகனை வழிபட்டால் குருப் பெயர்ச்சி யால் குறைவான நற்பலன் கள் பெற்றவர் களும் நிறைவானநற்பலன்கள் பெறுவா ர்கள் என்பது திண்ணம்.

குருவுக்கு பரிகாரம் என கூறுவதானால் வியாழக்கிழமைகளில் குருவுக்கு விளக் கே ற்றி, அர்ச்சனை செய்து வழிபடலாம். 

தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ள கோவி ல்க ளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மேலும் முடிந்தவர்கள் தட்சிணாமூர்த்திக் கோ, அல்லது குருவுக்கோ அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, கொண்டைக் கடலையை (2 லிட்டர்) ஒரு பிளாஸ்டிக்த ட்டிலோ அல்லது பிளாஸ்டிக் கூடையிலோ போட்டு தானம் செய்வது நல்லது.

இந்த தானம் கட்டாயம் கிடையாது. குரு பகவானின் அருள் மேலும், மேலும் வேண்டும் என்பவர்கள் செய்தால் மட்டும். போதும்.

குருபகவானை வழிபட சில ஸ்லோகங்கள்: ********************************************** குருப்ரம்ஹா குருவிஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹா குரு சாட்சாத் பரப்ரம்ஹா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹா

குருவே சர்வலோஹானாம் பீஷஷே பவரோஹினாம் நிதயே சர்வ வித்யானம் தட்ஷினா மூர்த்தியே நமஹ

குணமிகு வியாழ குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் பிரஹஸ்பதி வியாழப் பரகுரு தேவா கிரகதோஷமின்றி காட்சித் தருள்வாய்.

குரு பகவான்- சில விவரங்கள்: ************************************. குருபகவானின் தேவகுரு - பிரகஸ்பதி அசுரகுரு - சுக்ராச்சாரியார் பூஜை செய்ய உகந்த மலர் -முல்லை ஹோமம் செய்ய -அரச மர குச்சிகள், பசு நெய் தானியம் - கொண்டைக்கடலை வாகனம்- யானை அதிதேவதை - பிரம்மா நவரத்தினம் -புஷ்பராகம் உலோகம்- தங்கம் வஸ்திர நிறம் - மஞ்சள் நிவேதனம் - வெண் பொங்கல்

குருவே சரணம். குருபகவான் திருவருள் அனைவருக்கும் கிட்டடும்...

.
மேலும்