விளக்கேற்றும் மாத பலன்கள் என்ன?

By Tejas

காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

 

சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

 

வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

 

ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

 

புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .

 

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும்.

 

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும்.

 

மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .

 

பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்

மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்

ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்

 

கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்?

 

* கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

 

* முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

 

* ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.

 

* தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.

 

* நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

 

* மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

 

* சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

 

* குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

.
மேலும்