வளங்கள் பெருகும் ஸ்ரீ விநாயகப்பெருமான் திருவடிகளே சரணம் போற்றி!

By Tejas

ஓம் ஸ்ரீசுமுகாய நமஹ ஓம் ஸ்ரீஏக தந்தாய நமஹ ஓம் ஸ்ரீகபிலாய நமஹ ஓம் ஸ்ரீகஜகர்ணிகாய நமஹ ஓம் ஸ்ரீவிகடாய நமஹ ஓம் ஸ்ரீவிக்னராஜாய நமஹ ஓம் ஸ்ரீகணாதிபாய நமஹ ஓம் ஸ்ரீதூமகேதுவே நமஹ ஓம் ஸ்ரீகணாத்யஷேயே நமஹ ஓம் ஸ்ரீபாலசந்த்ராய நமஹ ஓம் ஸ்ரீகஜாநநாய நமஹ ஓம் ஸ்ரீவக்ரதுண்டாய நமஹ ஓம் ஸ்ரீசூர்ப்பகர்ணாய நமஹ ஓம் ஹேரம்பாய நமஹ ஓம் ஸ்ரீஸ்கந்த பூர்வஜாய நமஹ ஓம் ஸ்ரீசிந்தாமணி கணபதையே நமஹ ஓம் ஸ்ரீசிந்தாமணி கணபதையே நமஹ ஓம் ஸ்ரீசிந்தாமணி கணபதையே நமஹ

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக் கண்ணுத லுடையோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் — உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக் காதலால் கூப்புவர் தம் கை அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம் –நல்ல குண மதிகமா மருணைக் கோபுரத்துள் மேவும் செல்வகண பதியைக் கைதொ தொழுதக் கால். கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும் கணபதி யென்றிடக் கரும மாதலால் கணபதி யென்றிடக் கவலை தீருமே.

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே! (சம்பந்தர் தேவாரம்) வானுலகும் மண்ணுலகும்வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்

.
மேலும்