விநாயகர் அபிஷேகம் - எந்த ராசிக்கு என்ன பலன்கள்?

By saravanan

மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பான வாழ்க்கை அமையும்.

மிதுனராசிக்காரர்கள் விநாயகருக்கு எலுமிச்சை சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கும்.

கடக ராசிக்காரர்கள் விநாயகருக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் தனலாபம் உண்டாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.

கன்னி ராசிக்காரர்கள் விநாயகருக்கு சாத்துக்குடி அல்லது நார்த்தம்பழத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் இன்னல்கள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிட்டால் இன்பமான வாழ்வு அமையும்.

தனுசு ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

மகர ராசிக்காரர்கள் விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பான வாழ்க்கை அமையும்.

.
மேலும்