சக்திவாய்ந்த விராலி மஞ்சள் பூஜை தகவல்கள்!

By Tejas

சரியான வயதில் நல்ல துணையுடன் திருமணம் நடக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தற்காலத்தில் அமைவது மிகவும் கடினமாக இருக்கிறது.

பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், அதன் பின் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று ஆயிரம் கவலை இருக்கிறது. அதனில் மேலாய், திருமண வயதை தாண்டிய பின்பும் திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் கவலை அதிகமாகி விடுகிறது.

அதிலும், தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் எந்த வித குறைகளும் இல்லாமல் திருமண வயதை தாண்டி திருமணம் ஆகாமல் இருந்தால் பெற்றோர்கள் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். அந்த கவலைகளை விராலி மஞ்சள் பூஜை கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

21 வெள்ளிக்கிழமை காலை 10.30லிருந்து 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை அம்மன் கோவிலில் செய்ய வேண்டும். நமக்கு நன்கு தெரிந்த விரலிமஞ்சள் இதனை 27 என்ற கணக்கில் வாங்கி கொள்ளலாம்.

அந்த விராலி மஞ்சளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அதனில் ஒரு மஞ்சளில் மஞ்சள் கயிற்றை கட்டி அம்பாளுக்கு சாத்தி விட வேண்டும்.

பின்னர், மீதமுள்ள 26 மஞ்சளை 26 சுமங்கலி பெண்களுக்கு வழங்க வேண்டும். அதனுடன் ரவிக்கை துணியும் வழங்க வேண்டும். அந்த சுமங்கலி பெண்களிடம் திருமணமாகாத ஆணோ / பெண்ணோ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்கையில் 21 வாரங்கள் முடிவதற்குள் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு திருமணம் யோகம் கூடி வந்துவிடும். திருமண யோகம் கூடி வந்தாலும் இந்த பூஜையை தொடரவேண்டும். 21 வாரங்கள் முடிந்த பிறகு இந்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

21வது வாரம் முடிக்கையில் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூல தட்டில் பழங்கள், பிரசாதம் உள்ளிட்டவற்றை வைத்து கொடுக்க வேண்டும். உங்களால் முடிந்தால் ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யலாம். அந்த புண்ணியம் உங்கள் பரம்பரைக்கே தொடரும் என்பது சாஸ்திரம். மற்றவர்களுக்கு செய்யும் நன்மை நம்மை பின்தொடரும்.

.
மேலும்