விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் ?

By News Room

சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும் முதல் நாள் ***விஷ்ணுபதி புண்ய காலம்*** என்று அழைக்கப்படும்.

குரோதி வருடம் - கார்த்திகை மாதம் 01 ஆம் தேதி, 16.11.2024, சனிக்கிழமை காலை 07.32 am மணிக்கு சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். (பெயர்ச்சி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாக வைத்து ஸ்ரீநிவாசன் திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி தெரிவிக்கப்பட்டுள்ளது). இது ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் 4 நாட்கள் மட்டுமே வரும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நன்னாளாகும்.

இந்த விஷ்ணுபதி புண்யகால நாளன்று அதிகாலை முதல் மதியம் 01.32 pm மணிக்குள் (அதாவது சூரியன் பெயர்ச்சி ஆகும் நேரத்திற்கு 6 மணி நேரம் முன்னும் பின்னும் உள்ள நேரத்தில்) தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று 27 முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்த பின்னர் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் மற்றும் ஸ்ரீமஹாவிஷ்ணு வழிபாடு செய்தால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும் அள்ளி வழங்கும் ஒரு உன்னதமான திருநாளாக இந்த நாள் விளங்கும்.

மேலும் அன்றைய நாளன்று சூரியன் வழிபாடு மேற்கொள்வதும், முன்னோர்களுக்கு உண்டான திதி - தர்ப்பணம் அளிக்கவும் அதனுடன் சேர்ந்து உங்களால் இயன்ற தான - தர்மங்களும் செய்தால் அனைத்து விதமான விஷங்களிலும் சாதகமான நிலை உண்டாக வழி பிறக்கும். மேலும் அன்றைய தினம் மாலையில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்த நாள் இன்னமும் சிறப்பான நற்பலன்களை நிச்சயம் அளிக்கும்.  எனவே இந்த நாளன்று அனைவரும் தவறாது வழிபாடு மேற்கொண்டு மேன்மை அடைய, எல்லாம் வல்ல எமது குருமார்கள் அனைவரையும் நான் மனமார பிரார்த்திக்கிறேன்.

.
மேலும்