திருமணங்கள் கோயில், மண்டபம் எங்கே நடத்தலாம்

By Senthil

நமது முன்னோர்கள் ஆதிகாலம் தொட்டே திருமணங்களை தங்கள் வீடுகளிலேயே நடத்தி வந்தனர்கள். தற்போது கூட சில கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

வீட்டில் போதுமான இடம் இல்லாதவர்களே அப்பகுதியில் உள்ள பெரிய கோவில் அல்லது பெரிய மண்டபங்களில் தங்கள் திருமணங்களை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக இடவசதி இல்லாதவர்கள் ஆலயங்களில் வைத்து திருமணத்தை நடத்தினார்கள். 

ஆலயத்தில் வைத்து திருமணம் நடக்கும்போது இறைவனின் சந்நதியில், அதாவது இறைசக்தி நிறைந்திருக்கும் இடத்தில் தம்பதியர் தாங்கள் வாழ்வினில் இணையும்போது தவறு ஏதும் நடந்துவிடாது, வாழ்க்கை சிறப்படையும் என்று நம்பினார்கள். மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்கள் பெரும் ஆடம்பரம் உள்ளது. கோவில் கல்யாணங்களில் வீண் ஆடம்பரம் இடம்பிடிப்பதில்லை. 

ஆலயங்கள் இறைவனின் இருப்பிடம் என்பதால் பயபக்தியுடன் சம்பிரதாயங்களில் நம் கவனத்தை செலுத்துகிறோம். கோவிலுக்குள் காலணி அணிந்து வந்து மணமக்களை வாழ்த்துவதில்லை. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆலயத்தில் வைத்து திருமணத்தை நடத்துவதே சிறந்தது என்று நமக்குத் தோன்றுகிறது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்துவது தவறு அல்ல. எங்கே நடத்துகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி நடத்துகிறோம் என்பதே முக்கியம்.

.
மேலும்