ஒரு மரம் 50 ஆண்டுகள் வெட்டாமல் இருந்தால் என்ன ஆகும்?

By News Room

மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.

பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய்

காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய்

மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய்

ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய்

நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய்

உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய்

பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்

இது சற்றுப் பழைய கணக்கீடு.

தற்போதைய நிலவரப்படி இது பதின் மடங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத மக்களால் இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் மொட்டையடிக்கப் படுகின்றன என ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.

.
மேலும்