1 - ஞாயிறு
இவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். தன்னுடைய அழகையும் செயல்களையும் அடிக்கடி புகழ்ந்து பேசுவார்கள். ஒரு சிலர் பரம்பரையாக பணக்கார்கள் ஆக இருப்பார்கள்.ஒரு சிலர் தன்னுடைய சுய உழைப்பால் பொருள் ஈட்டுவர்கள்.
இவர்களின் அதிதேவதை சிவன் நிறம் வெண்மை நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிரைவேற்றுவான் தலையில் வழுக்கை உண்டு. எதிரிகளை வெல்லுவான்.
பித்த கோளாறு உள்ளவன். கோபம் மிக்கவன். தான தருமங்கள் செய்பவன். கொடையாளி என்று பெயர் ஈடுப்பான்.
2 – திங்கள்கிழமை
நாடாறு மாதம் காடாறு மாதம் என்று வாழ்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும் வயத்தில் உள்ள பிள்ளை கூட நழுவி வெளியே வந்து விடும் அளவுக்கு இனிமையாக பேச கூடியவன். அரசாங்கத்தின் வேலை செயவான் இன்பம் துன்பம் இரண்டையும் சரி சமமாக ஏற்று கொள்வார்கள். நேர்மை உடன் வாழலாம் என்று நினைத்து அதைக் கடைப்பிடிக்க செய்வார்கள். சமுதாயத்தில் நல்ல பேரும் புகழும் பெற்று வாழுவார்கள் பரந்த நோக்கம் கொண்டும் பரோபகாரம் கொண்டும் வாழுவார்கள்.
3 - செவ்வாய்க்கிழமை
தந்திரசாலி ஆக இருப்பான் மெய்யை பொய் ஆக்கி பேசுவதில் கெட்டிக்காரர்கள். கோபமாக பேசுவதில் வல்லவர்கள்- சண்டை போடுவதில் மட்டுமல்ல சமாதானம் செய்வதில் கூட வல்லவர்கள்.மந்திரி, விவசாயம் செய்து வாழ்வான் மொத்தத்தில் நல்லவனுக்கு நல்லவன் வல்லவனுக்கு வல்லவன்
4 = புதன்கிழமை-
கல்வி அறிவு உள்ளவன். பண்டிதன் அழகன் இனிமையாக பேசக் கூடியவன்- செல்வம் மிகுந்தவன், அறிவாளி, கவிஞன் வாணிபத்தில் தேர்ச்சி பெற்றவன், நற்குணம் உள்ளவன், மாதா , பிதா , குரு , தெய்வம் என்ற தத்துவத்தை நன்கு உணர்ந்து அதை வாழ்க்கையில் கடை பிடிக்கவும் செய்வார்கள். சத்யம் ,நீதி நேர்மையுடன் வாழுவார்கள். தெய்விக பணியில்தான் விரும்பி ஈடு படுவார்கள்.
5 – வியாழக்கிழமை =
தர்ம காரியங்களில் விரும்பி ஈடுபடுவார்கள் , சமூகநீதிஇறைபக்தி கொண்டவர்கள் , இவர்கள் உயர் கல்வி படித்து இருப்பார்கள் கவிஞர்களையும் , கல்வி கற்றவர்கள் மீது பாசம் அன்பு கொண்டு ஆதரவு கொடுப்பார்கள் - சாஸ்திரம் அறிந்தவன் , நல்ல குணம் உள்ளவன்.அரசாலும் , மக்களிடம் பாரரட்டு பெறுவான் - சிறந்த ஆசிரியர்கள் ஆக பணி புரிவார்கள் -
6 – வெள்ளிக்கிழமை
மிகவும் உயர்ந்த காரியங்களை செய்வதில் விருப்பம் உள்ளவன் - முன் கோபம் உள்ளவர்கள்- பிறரை அனாவசியமாக பேசுவதில் வல்லவர்கள்.தான் சொல்வதை பிறர் அப்படியே கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். வெறும் புகழ்ச்சி விரும்பி , புகழ்ச்சிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பார்கள் - வாழ்கையில் ஏற்படும் தோல்வி கண்டு மனம் பொறுக்க மாட்டார்கள் - இரட்டை நாடிக்காரர்கள். தலைமுடி சுருண்டு அழகாக தோற்றம் உள்ளவர். விலை அதிகமான வெண்மை ஆடைகளை விரும்பி அணிவார்கள் - நல்ல வழியில் செல்லுவார்கள் -
7 = சனிக்கிழமை
ஆராய்ச்சிகள் செய்து முன்னேற்றம் அடைவார்கள். இளம் வயது ஆனாலும் முதுமை தோற்றம் போல் காணப்படுவார்கள் .மெலிந்த் உடலைக் கொண்டவர்கள். கொடுமையான குணங்கள் உண்டு. பிரறை ஏமாற்றுவதில் கெட்டிகார்கள் மற்றும் தந்திர சாலிகள், துணிச்சல்காரர் , அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள்.பொது ஜன சேவையில் அதிக விருப்பம் உண்டு.